இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆடவர் ஐபிஎல் தொடரை போன்று மகளிருக்கான மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 5 அணிகள் பங்கேற்ற நான்காவது பிரிமியர் லீக் தொடரானது கடந்த மாதம் 9-ஆம் தேதி துவங்கி நேற்று பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த மகளிர் தொடரும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று ரசிகர் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது.
அணிக்காக சுயநலமின்றி செயல்பட்ட ஸ்ம்ரிதி மந்தனா :
அந்த வகையில் 5 அணிகள் பங்கேற்ற இந்த நான்காவது மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. வடோதரா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பெங்களூரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய இலக்கினை நோக்கி மிகச் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணியானது : 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஸ்ம்ருதி மந்தனா 41 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 87 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். கடந்த சில மாதங்களாகவே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப் பெரிய பாதகத்தை சந்தித்த மந்தனா இந்த வெற்றியின் மூலம் மகிழ்ச்சி அடைவார் என்று ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : அவங்க 2 பேர்ல யாரை செலக்ட் பண்றது? இதுதான் எங்களுக்கு இருக்குற தலைவலி – சூரியகுமார் யாதவ் பேட்டி
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டிக்கு முன்னதாக அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்ததாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : 103 டிகிரி அளவில் காய்ச்சல் இருந்தாலும் நான் இறுதிப் போட்டி விளையாட வேண்டும் என்றும் பெங்களூரு அணியின் வெற்றிக்கு தன்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே காய்ச்சலுடன் விளையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



