சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது நடப்பு சாம்பியனாக எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி தங்களது முதல் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை எதிர்த்து நாளை பிப்ரவரி 7-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த 2 பேரை தேர்வு செய்வது கடினம் : சூரியகுமார் யாதவ்
ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி பயிற்சி போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் இம்முறையும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
அந்த அளவிற்கு இந்திய அணி பலமான அணியாகவே இருக்கின்றது. இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் முக்கியமான தலைவலி இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அக்சர் பட்டேலை பொறுத்தவரை இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பதனால் அவர் இடம் பெறுவார். அதே வேளையில் எதிரணியை பொறுத்து அதற்கான காம்பினேஷனை நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வதில் நல்ல தலைவலி ஏற்படும்.
இதையும் படிங்க : சீக்கிரம் கொண்டு வாங்க அந்த செல்லத்தை.. இறுதிப்போட்டியில் அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ
ஏனெனில் இருவருமே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களில் ஒருவரை தேர்வு செய்வது என்பது கடினம் என்று சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை மிகப்பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்தும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



