நானும் பெரிய தவறை செய்துவிட்டேன். தோல்விக்கு நானும் ஒரு காரணம் தான் – உணமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்மித்

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 23 வது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

dcvsrr

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக 24 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் 5 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 45 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 39 ரன்களும் குவித்தனர். அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே அடித்தது.

ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ராகுல் திவாதியா 38 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 34 ரன்களை குவித்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

dc

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : நாங்கள் 40 ஓவர் முற்றிலும் சரியான கிரிக்கெட்டை விளையாட வில்லை. மேலும் எங்களது திட்டங்களையும் எங்களால் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. போட்டியில் பிரஷர் இருக்கும்போது இது போன்று பல போட்டிகளை நாம் வெற்றி பெறாமல் போகமுடியும்.

- Advertisement -

பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் தங்களது பணியை சிறப்பாகச் செய்தார்கள். மைதானமும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும் போது பந்து சற்று நின்று வந்தது அதேபோன்று 10 முதல் 15 ரன்களை இந்த போட்டியில் அதிகமாக வழங்கி விட்டோம். அதனாலேயே தோல்வி கிடைத்தது. இன்னும் எங்களிடம் பாசிட்டிவ்விட்டி உள்ளது. அதனால் விரைவில் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம். மேலும் மூமென்ட்டமும் எங்களுடன் இன்னும் வரவில்லை. நானும் இந்த போட்டியில் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அதனை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

Smith

ராஜஸ்தான் வீரர்கள் இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தது கருதுகிறேன் ஆனால் ஒருவராவது இறுதி வரை போட்டியை கொண்டு சென்றிருக்க வேண்டும். குறிப்பாக நான் இறுதிவரை ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். 10ஆம் தேதியுடன் ஸ்டோக்ஸ் குவாரண்டைன் முடிவதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பதை நாளை மறுதினம் தான் எங்களுக்குத் தெரியவரும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement