Steve Smith : சிறந்த பவுலரை எப்போது உபயோகிப்பது என்ற குழப்பத்தில் போட்டியை தோற்றோம் – ஸ்மித் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Smith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பண்ட் 36 பந்தில் 78 ரன்களை அடித்தார். தவான் 27 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஸ்மித் கூறியதாவது : நாங்கள் பேட்டிங் செய்யும் போது இறுதியில் ரன்களை குவிக்க தவறி விட்டோம். டெத் ஓவர்களில் ரபாடா சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தினர். ஷிகார் தவான் அருமையாக ஆடினார். பண்ட் திறமையாக ஆடினார் அவரது ஆட்டமே எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து அவர்களுக்கு தந்தது.

Pant

மேலும், எங்களது அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் தான் அவரை விக்கெட்டுகளை வீழ்த்த பவுலரை முன்கூட்டியே பயன்படுத்தலாமா ? அல்லது அவரை ஓவர்களில் வீச வைக்கலாமா ? என்ற சந்தேகம் இருந்தது. மைதானத்தில் கடைசிவரை டியூ இருந்தது அதனால் பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச கஷ்டமாக இருக்கும். எங்கள் அணியில் ஆர்ச்சர் மட்டும் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக வீசி வருகிறார் என்று ஸ்மித் கூறினார்.

Advertisement