சென்னை அணிக்கு எதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு இவர் ஒருவரே காரணம் – ஸ்மித் புகழாரம்

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் (9 சிக்ஸர் 1 பவுண்டரி) , ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் (4 சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தனர். அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

- Advertisement -

37 பந்துகளை சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 7 சிக்சர் ஒரு பவுண்டரி என 72 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் வாட்சன் 33 ரன்களும், இறுதி நேரத்தில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசிய தோனி 29 ரன்களும் குவித்தனர். இதனால் சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டிக்குப் பிறகு வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் கூறியதாவது : ஆர்ச்சர் இறுதியில் அடித்த சிக்ஸர்கள் அசாத்தியமானது. இந்தப்போட்டியில் சஞ்சு சாம்சன் அனைத்து பந்துகளையும் சிக்சர் அடிக்கவே முயற்சி செய்தார். அதனாலே நான் அவருக்கு தொடர்ந்து சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். இவ்வாறு நான் சிங்கிள் ரன் எடுத்து ஸ்ட்ரைக் கொடுத்தது அவருக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

இன்று சாம்சன் ஆடிய விதம் நம்பமுடியாத அளவில் பிரமாதமாக இருந்தது. சென்னை அணியின் சார்பாக தோனி இறுதியில் சில சிக்சர்களை அடித்தார். மேலும் டுபிளேசிஸ் அருமையாக விளையாடினார். இந்த போட்டியில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் அவர்கள் சரியான இடத்தை தேர்வு செய்து பந்து வீசியதால் சென்னை அணியை கட்டுப்படுத்த முடிந்தது என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement