டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த – ஸ்மித்

Smith
- Advertisement -

ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்த போது அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக ஆடி சதம் அடித்து 144 ரன்கள் குவித்தார்.

Aus vs Eng

- Advertisement -

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் என்ற டீசன்டான ரன்களை அடைந்தது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஸ்மித் ஒரு உலக சாதனை புரிந்துள்ளார். அது யாதெனில் கோலி, சச்சின் ஆகியோரை தாண்டி விரைவாக குறைந்த இன்னிங்சில் 24 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 24 சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் 66 இன்னிங்ஸ்கள் 24 சதங்களை அடித்துள்ளார்.அதற்கு அடுத்த இடத்தில் கோலி 123 இன்னிங்ஸ் அதற்கு அடுத்த இடத்தில் சச்சின் 125 இன்னின்ங்ஸ்களில் 24 சதம் அடித்து உள்ளனர்.

Smith 1

இந்நிலையில் நேற்று தனது 118 ஆவது இன்னிங்சை ஆடிய ஸ்மித் சதம் அடித்தது மூலம் இவர்கள் இருவருடைய சாதனையை பின்னுக்குத் தள்ளி விரைவாக 24 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement