ஒரே இன்னிங்சில் சச்சின் மற்றும் சங்கக்காரா சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித் – என்ன சாதனை தெரியுமா?

Smith
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியும், கராச்சியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது லாகூர் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

pak vs aus

- Advertisement -

அதன்படி கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியானது 391 ரன்களுக்கு தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக கவாஜா 91 ரன்களையும், கிரீன் 79 ரன்களையும் குவித்தனர்.

மேலும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 67 ரன்கள் குவித்தார். அதே போன்று அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடிக்கவில்லை என்றாலும் முதல் இனிங்ஸில் 59 ரன்கள் குவித்தது மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

Smith

அந்த சாதனை யாதெனில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 இன்னிங்ஸ்களில் விளையாடியபோது அதிக ரன்களை குவித்த வீரராக சங்கக்காரா (7913 ரன்களுடன்) முதலிடத்தில் இருந்தார். அதனைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் (7869 ரன்களுடன்) இரண்டாம் இடத்தில் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இவர்கள் இருவரையும் கடந்த ஸ்டீவ் ஸ்மித் 150 இன்னிங்ஸ்களில் விளையாடி 7993 குவித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த மூன்று பேரை தவிர்த்து சேவாக் (7694) மற்றும் டிராவிட் (7680) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் படைத்த இந்த சாதனைக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.பி.எல் தொடரில் விளையாட இருக்கும் ஜிம்பாப்வே வீரர் – யார் அவர்? – விவரம் இதோ

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் சுமார் 60 ரன்கள் சராசரியுடன் தற்போது 85 டெஸ்ட் போட்டிகளில் 7993 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement