- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவரை பாத்து புதிய துணை கேப்டன் சுப்மன் கில் கத்துக்கனும்.. மந்தனாவின் பேட்டியை பார்த்து ரசிகர்கள் கருத்து

இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் நேபாள் ஆகிய அணிகளை தோற்கடித்தது. அதனால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா ஜூலை 26ஆம் தேதி தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் விளையாட உள்ளது.

முன்னதாக ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற நேபாளுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் செமி ஃபைனலை முன்னிட்டு தமக்குத் தாமே ஓய்வெடுத்துக் கொண்டார். அதன் காரணமாக துணை கேப்டன் ஸ்மிருத்தி மந்தனா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் துவக்க வீராங்கனையான அவர் கேப்டனாக வந்ததும் தன்னுடைய ஓப்பனிங் இடத்தை தமிழக வீராங்கனை ஹேமலதாவுக்கு பெருந்தன்மையுடன் கொடுத்தார்.

- Advertisement -

சுயநலமற்ற மந்தனா:
குறிப்பாக சமீபத்திய போட்டிகளில் ஹேமலதா சிறப்பாக விளையாட முடியாமல் தடுமாறினார். எனவே அவருக்கு தம்முடைய ஓப்பனிங் இடத்தை கொடுத்து சுயநலமின்றி நடந்து கொண்ட மந்தனா கேப்டனுக்கு அடையாளமாக செயல்பட்டார். அது பற்றி போட்டியின் முடிவில் கேட்ட போது அவர் கூறியது பின்வருமாறு. “ஓப்பனிங் வீராங்கனையாக உங்களுக்கு பேட்டிங் செய்யாத போட்டிகள் நிறைய கிடைக்காது”

“அதே போல மற்ற பேட்டர்களுக்கும் வாய்ப்பு கிடைப்பது முக்கியம். முந்தைய போட்டிகளில் நிலைமை வித்தியாசமாக இருந்ததால் மிடில் ஆர்டரில் விளையாடியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தென் ஆப்பிரிக்க தொடரிலும் மிடில் ஆர்டருக்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் இம்முறை அவர்கள் களத்தில் விளையாடி நேரத்தை செலவழிக்க முடிந்தது” என்று கூறினார்.

- Advertisement -

இதை பார்க்கும் ரசிகர்கள் இந்திய ஆடவர் அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் மகளிர் அணியின் துணை கேப்டன் மந்தனாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமான அபிஷேக் சர்மா முதல் போட்டியில் டக் அவுட்டானாலும் 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இருப்பினும் 3வது போட்டியில் ஜெய்ஸ்வால் அணிக்குள் வந்தார்.

இதையும் படிங்க: அவர் வேற மாதிரி யோசிக்கிறாரு.. பாண்டியா நீக்கப்பட்டதில் ஆச்சர்யப்பட ஒன்னுமில்ல.. ஆஷிஸ் நெஹ்ரா ஓப்பன்டாக்

அப்போது கேப்டனாக தம்முடைய ஓப்பனிங் இடத்தை அவருக்கு கொடுக்காத சுப்மன் கில் தமக்குத் தாமே ஓப்பனிங்கில் களமிறங்கி சுயநலமாக நடந்து கொண்டார். குறிப்பாக உள்ளூர் முதல் ஐபிஎல் வரை அபிஷேக் சர்மா தம்முடைய கேரியர் முழுவதும் துவக்க வீரராகவே விளையாடி இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வகையில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவமில்லாத அவருக்கு 3வது போட்டியில் கில் ஓப்பனிங் இடத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதை சுப்மன் கில் செய்யாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -