அணிக்குள் மோதலா? அம்பத்தி ராயுடு ஓய்வு அறிவிப்பு பற்றி – சி.எஸ்.கே கோச் பிளெமிங் கூறியது இதோ

Fleming
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே எதுவுமே சரியாக அமையவில்லை. முதலில் துரதிஸ்டவசமாக 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் விலகியது பந்துவீச்சு துறையை பலவீனப்படுத்திய நிலையில் தேவையின்றி தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டன்ஷிப் பதவியை ஜடேஜாவிடம் தோனி ஒப்படைத்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் கூட அனுபவமில்லாத ஜடேஜா தலைமையில் 4 தோல்விகளை சந்தித்த சென்னையின் பிளே ஆஃப் கனவு முக்கால்வாசி பறிபோனது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

அதை விட கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் என மொத்தமாக சொதப்பிய ஜடேஜா அந்த பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கினார். அத்துடன் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அவர் எஞ்சிய 2022 ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக விலகுவதாக அறிவிப்பு வெளியானது. அதனால் அதிர்ந்த ரசிகர்கள் 2021இல் இதேபோல் காயம் என்ற பெயரில் முதலில் வெளியேற்றப்பட்து பின்னர் மொத்தமாக கழற்றிவிடப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை ஜடேஜாவுக்கும் ஏற்பட்டதாக சந்தேகப்பட்டனர்.

ராயுடு சர்ச்சை:
அதனால் அடுத்த வருடம் ஜடேஜாவை மஞ்சள் உடையில் பார்ப்பது கடினம் என்று சமூக வலைதளங்களில் தீயாக செய்திகள் வலம் வந்தது. அந்த நிலையில் ஜடேஜாவுக்கும் தங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என மறுத்த சென்னை நிர்வாக இயக்குனர் காசி விசுவநாதன் அடுத்த வருடம் நிச்சயம் அவர் தங்களுக்காக விளையாடுவார் என்று தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையில் பரம எதிரியான மும்பைக்கு எதிரான முக்கிய போட்டியில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்த சென்னை 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

அதற்கு மத்தியில் 2018 முதல் சென்னைக்காக விளையாடி வரும் அனுபவ நம்பிக்கை நட்சத்திரம் அம்பத்தி ராயுடு இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டரில் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் அவர் அதை டெலிட் செய்த நிலைமையில் அதற்கடுத்த அரை மணி நேரத்திற்குள் ராயுடு ஓய்வு பெறவில்லை என்றும் இம்முறை அவரின் பேட்டிங் சுமாராக இருப்பதால் ஏற்பட்ட மன ரீதியான குழப்பத்தில் அவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என்று மீண்டும் காசி விசுவநாதன் பதறியடித்துக் கொண்டு வந்து தெளிவுபடுத்தினார்.

- Advertisement -

கழற்றிவிடப்படும் ராயுடு:
சுரேஷ் ரெய்னா கழற்றி விடப்பட்டது, காயம் என்ற பெயரில் ஜடேஜா விலகியது, ஓய்வு பெறுகிறேன் என அறிவித்து ராயுடு டெலிட் செய்தது என அடுத்தடுத்த சென்னை அணியில் இருக்கும் முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட நிலைமை அந்த அணிக்குள் ஏதோ சலசலப்பும் சண்டை சச்சரவும் இருப்பதை காட்டுவதாக பல கிரிக்கெட் வல்லுநர்கள் பேசி வருகின்றனர்.

Rayudu

குறிப்பாக இந்த வருடம் 6.50 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட ராயுடு 12 போட்டிகளில் 208 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அவரின் பேட்டிங் பற்றி அணி நிர்வாகம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அதனால் அதிருப்தி அடைந்ததாலேயே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதாகவும் அதன்பின் அணி நிர்வாகம் சமாதானம் செய்ததால் உடனடியாக டெலிட் செய்ததாகவும் வாசிம் ஜாபர் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் கூறினார்கள்.

- Advertisement -

அந்த நிலைமையில் குஜராத்துக்கு எதிராக நேற்று 13-வது போட்டியில் களமிறங்கிய சென்னை மீண்டும் பரிதாபமாக தோல்வியடைந்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 9 தோல்விகளை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. அந்த போட்டியில் ராயுடுவுக்கு பதில் தமிழக வீரர் நாராயன் ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஒருவேளை ஓய்வு அறிவிப்பு பற்றிய ட்வீட்டை போட்டதாலேயே அவரை அந்த அணி நிர்வாகம் நீக்கியதா என்ற கேள்வி நேற்று முதல் வலம் வருகிறது.

flemming

பிளெமிங் பதில்:
இந்நிலையில் அணிக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றியும் அம்பத்தி ராயுடு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ஏன் நீக்கினார் என்பது பற்றியும் செய்தியாளர்களின் கேள்விக்கு சென்னையின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்றைய போட்டி முடிந்த பின் பதிலளித்தது பின்வருமாறு. “எங்களுக்கு அது ஏமாற்றத்தை அளிக்கவில்லை. இருப்பினும் உண்மையை சொல்ல வேண்டுமெனில் அது ஒரு தேநீர் கோப்பையில் (டீ கப்) ஏற்பட்ட சிறிய புயலாக இருக்கலாம். ஆனால் அவர் நன்றாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரின் அந்த அறிவிப்பு எங்களது அணியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இது ஒரு கதையல்ல” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : நேரம் வரும்போது பார்முக்கு வந்துருவாங்க, அவங்கள பத்தி கவலை வேண்டாம் – கங்குலி கருத்து

குஜராத்துக்கு எதிரான போட்டியில் பிளே ஆஃப் வாய்ப்பு ஏற்கனவே பறி போய்விட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ராயுடு பெஞ்சில் அமர வைக்கப்பட்டதாக பிளமிங் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் அறிவிப்பு ஒரு சிறிய புயலைப் போன்றது என்றாலும் அணிக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் விளக்கமளித்தார். அத்துடன் வழக்கம் போல அவர் தொடர்ந்து சென்னை அணியில் இருப்பார் என்றும் உறுதிபடக் கூறினார்.

Advertisement