இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்ததால்..இலங்கைக்கு இந்த ஆபத்து வரும்…சர்ச்சையை உண்டாக்கிய இலங்கை அமைச்சர்..

karthik
Advertisement

இலங்கை ரசிகர்களின் இந்த செயலால் இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார்.

sharma

மேலும் இந்திய அணிக்கு ஆதரவாக மைதானத்தில் ரசிகர்களால் எழுப்பப்பட்ட கோஷங்கள் எட்கா உடன்படிக்கைகளுக்கு எதிரானது என்றும் வங்கதேச அணி வீரர்கள் இலங்கைக்கு எதிரான போட்டியில் தவறாக நடந்து கொண்டாலும் அவர்கள் இலங்கையின் அரசியல் அல்லது பொருளாதாரத்தில் தலையிடுவதில்லை ஆனால் இந்தியர்கள் அப்படியில்லை ஆபத்தானவர்மள் என்றும்கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.இறுதிப்போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

wimal

இந்த போட்டியின் போது தான் இலங்கை ரசிகர்கள் இந்திய அணிக்காக சப்போர்ட் செய்தனர்.இலங்கை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இலங்கை தேசிய கொடியை மைதானத்தில் பிடித்தபடி நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement