சென்னை வீரர்கள் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள்..! சல்மான் கான் கிண்டல் ..! – எதற்கு தெரியுமா..?

salman
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது சென்னை அணி. வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கோப்பையை கைப்பற்றி சென்னை ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மிதக்கவிட்டுள்ளது.இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடி சென்னை அணியை வயதான அணி என்று கூறிவந்தவர்கள் முகத்தில் கறியை பூசியுள்ளது.இந்நிலையில் பாலிவுட் நடிகரான சல்மான் கான் சென்னை அணியில் இளம் வீரர்களே இல்லை என்ற கேட்ட கேள்விக்கு அசத்தலான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
Kedar-Jadhav

நேற்று மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 வர்கள் முடிவில் 178 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் வில்லையம்சன் 47 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் 36 வயதான வாட்சன் வாட்சன் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார்.

- Advertisement -

இந்த தொடர் ஆரம்பித்த காலம் முதலே சென்னை அணியை வயதானவர்கள் அணி என்று பலரும் கிண்டல் செய்து வந்தனர். இருப்பினும் இந்த வயதான வீரர்கள் கொண்ட அணிதான் ஐபிஎல் வரலாற்றில் 3வது முறையாக ஐபிஎல் தொடரை வென்று கோப்பையை கை பற்றியது இதன்மூலம் சென்னை அணியயை வயதான வீரர்கள் கொண்ட அணி என்று இதுவரை கிண்டல் செய்து வந்தவர்கள் வாயடைத்து போய் நின்று வருகின்றனர்.
chennai

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகட்சியில் பங்குபெற்ற பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சென்னை அணிக்கு ஆதரவளித்து பேசியுள்ளார். சமீபத்தில் இந்த நகிழ்ச்சியல் பங்குபெற்ற சல்மான் கானிடம் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் முன்னாள் இந்திய வேக பந்து வீச்சாளர் இர்பான் பாதான் “சென்னை அணியில் இளம் வீரர்கள் குறைவாக இருக்கின்றனர் அதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் கூறிய சல்மான் கான் “என்ன சொல்கிறீர்கள் ? யாரும் 30 வயதில் ஓய்வு பெற மாட்டார்கள் ” என்று பளிச்சென்று பதிலளித்துள்ளார்.

Advertisement