330 ரன்ஸ்.. இலங்கையை வெளுக்கும் ஆஸி.. 21 வருடம் கழித்து கேரி சாதனை.. டிராவிட்டுக்கு நிகராக ஸ்மித்

SL vs AUS
- Advertisement -

இலங்கை மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அந்தத் நிலையில் ஆஸ்திரேலிய முன்னிலை வகிக்கும் அத்தொடரின் 2வது போட்டி பிப்ரவரி ஆறாம் தேதி ஃகால் மைதானத்தில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி மீண்டும் சுமாராக பேட்டிங் செய்து வெறும் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ், 85 தினேஷ் சண்டிமல் 74 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்டார்க், லயன், மேத்தியூ குனேமான் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

வெளுக்கும் ஆஸ்திரேலியா:

அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் வழக்கம் போல அதிரடியாக விளையாட முயற்சித்து 21 (22) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த உஸ்மான் கவாஜா 36 ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் – அலெக்ஸ் கேரி ஆகியோர் ஜோடி சேர்ந்தார்கள்.

கடந்தப் போட்டியிலேயே சதத்தை அடித்த ஸ்மித் மிகவும் நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்த கேரி கொஞ்சம் அதிரடி கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வெளுத்து வாங்கினார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே சதத்தை அடித்து அசத்தினார்கள். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 330/3 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

ஸ்மித், கேரி சாதனை:

களத்தில் ஸ்மித் 120*, கேரி 139* ரன்களுடன் உள்ளார்கள். இந்தப் போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து ஸ்மித் தன்னுடைய 36வது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தை அவர் பகிர்ந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 51
2. ஜேக் காலிஸ்: 45
3. ரிக்கி பாண்டிங்: 41
4. குமார் சங்கக்காரா: 38
5. ஜோ ரூட்/ராகுல் டிராவிட்/ஸ்டீவ் ஸ்மித்: தலா 36

இதையும் படிங்க: நியாயப்படி பாத்தா அவருக்கு தான் ஆட்டநாயகன் விருதை குடுத்திருக்கனும் – சுப்மன் கில் சரியான தேர்வு இல்ல

அதே போல விக்கெட் கீப்பர் கேரி இலங்கை மண்ணில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன் வாயிலாக இலங்கை மண்ணில் 21 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2004ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் கடைசியாக இலங்கையில் சதத்தை அடித்திருந்தார்.

Advertisement