நியாயப்படி பாத்தா அவருக்கு தான் ஆட்டநாயகன் விருதை குடுத்திருக்கனும் – சுப்மன் கில் சரியான தேர்வு இல்ல

Gill-and-Shreyas
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 38.4 ஓவரிலேயே 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 251 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

சுப்மன் கில்லுக்கு விருது கொடுத்தது தவறு :

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 96 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது தவறு என்றும் அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் அந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் நேற்றைய இந்த போட்டியின் போது இந்திய அணி தங்களது ஆட்டத்தை துவங்குகையில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அவ்வேளையில் நான்காவது வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 59 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடி காரணமாக இந்திய அணி வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதோட சுப்மன் கில்லுடன் இணைந்து அவர் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் தான் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது.

- Advertisement -

ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் முன்கூட்டியே ஆட்டமிழந்து இருந்தால் போட்டியின் நிலைமை கூட மாறி இருக்கலாம். அது தவிர்த்து சுப்மன் கில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் நிதானத்தை கடைபிடிக்க மறுபக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவரது அதிரடி தான் போட்டியின் முமென்ட்டத்தையும் மாற்றியது.

இதையும் படிங்க : பேட்டிங் செய்ய வந்தப்போ இங்கிலாந்து அணி முறைச்சாங்க.. அதான் ரோஹித் சர்மா.. பீட்டர்சன் பாராட்டு

எனவே அவருக்கு தான் ஆட்டநாயகன் விருது சரியான ஒன்று என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கையில் சுப்மன் கில் தனது சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு தேவையில்லாத ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார் என்ற விமர்சனத்தையும் அவர் மீது வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement