கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு. இலங்கை அணியா இப்படி ஆடுனது – என்ன நடந்தது?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. அந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி தர்மசாலா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

INDvsSL

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் பதும் நிஷங்கா 75 ரன்களையும், குணதிலகா 38 ரன்களையும், கேப்டன் தசுன் ஷனகா 19 பந்துகளை சந்தித்து 47 ரன்களையும் குவித்தனர். அதன்பின்பு தற்போது இந்திய அணி 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது களம் இறங்கி விளையாடி வருகிறது.

bumrah

இந்நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் பவுலர்கள் 15 ஓவர்கள் வரை இலங்கை அணியை கட்டுக்குள் வைத்தனர் என்றே கூறலாம். ஏனெனில் 15வது ஓவரின் முடிவில் அதாவது 90 பந்துகளுக்கு இலங்கை அணி வெறும் 103 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது.

- Advertisement -

ஆனால் கடைசி 5 ஓவரில் அதாவது அடுத்த 30 பந்துகளில் 80 ரன்களை இந்திய அணி விட்டுக் கொடுத்ததால் இலங்கை அணி 183 என்ற பிரம்மாண்ட ரன் குவிப்புக்கு சென்றது. கடைசி 5 ஓவர்களில் இலங்கையானது ஓவருக்கு கிட்டத்தட்ட 16 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தை சோதித்துள்ளது.

இதையும் படிங்க : அந்த பையன் பார்ம்ல இருந்தா அவனோட பேட்டிங்கை பாத்துகிட்டே இருக்கலாம் – இர்பான் பதான் பாராட்டு

இப்படி இறுதி ஐந்து ஓவர்களில் இந்திய அணி அதிக அளவில் ரன்களை விட்டுக் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement