இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்து அசத்தியது.

பின்னர் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியானது 137 ரன்களை மட்டுமே குவிக்க 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் இஷான் கிஷன் 89 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : ஸ்ரேயாஸ் அய்யர் எப்போதுமே ஒரு பலமான பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அவர் மட்டும் பார்ம் இருந்தால் அவருடைய இன்னிங்சை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அந்த வகையில் அவர் மிகப் பெரிய ஷாட்களை விளையாடுவார். மேலும் ஒரு இடத்தில் நிற்காமல் நகர்ந்து வந்து பவுலர்களை அவர் எப்போதுமே குழப்புகிறார்.

ஷ்ரேயாஸ் ஐயர் பேலன்ஸ் குறையாமல் மிகப் பெரிய ஷாட்களை விளையாடக் கூடியவர். அவருடைய சிறப்பே நின்ற இடத்தில் சிக்சர்களை விலாச கூடியதுதான். அந்த அளவிற்கு பலம் கொண்டு பெரிய பெரிய சிக்ஸர்களை அவர் அடிக்கிறார் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அவரிடம் எனக்கு பிடித்ததே பெரிய சிக்ஸர்களை அடிக்கும்போது பந்தை மட்டுமே பார்ப்பார்.
இந்த போட்டியிலும் அவர் 2 சிக்சர்களை விளாசியது மிக சிறப்பாக இருந்தது. தன் மீது உள்ள விமர்சனங்களுக்கு அவர் தற்போது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். எப்பொழுதுமே நீங்கள் விமர்சிக்கப்படும் போது வார்த்தைகளால் பதில் அளிப்பதை விட உங்களது ஆட்டத்தினால் பதிலளிப்பது இன்னும் சிறப்பாக அமையும். ஆனாலும் ஷ்ரேயாஸ் அய்யர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு வித்தியாசமான பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க : குழந்தை இறந்த துக்கத்தையும் தாங்கிக்கொண்டு ரஞ்சி போட்டியில் சதம் விளாசிய வீரர் – நெகிழ்வைத்த சம்பவம்
இர்பான் பதான் பாராட்டியதை போன்றே ஷ்ரேயாஸ் ஐயர் இந்த முதலாவது போட்டியில் ஆரம்பத்தில் முதலில் 12 பந்துகளில் வரை மிக நிதானமாகவே இன்னிங்சை கட்டமைத்தார். பின்னர் அதிரடியில் இறங்கிய அவர் 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என 57 ரன்கள் குவித்து அசத்தினார். அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.



