வெளிநாட்டு வீரர்களால் ஐ.பி.எல் தொடரில் இலங்கை வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

Sl
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள 14 ஆவது ஐபிஎல் தொடரானது செப்டம்பர் மாதம் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் இந்த எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் அச்சமயத்தில் சர்வதேச போட்டிகள் இருப்பதாலும் மற்றும் உலக கோப்பைக்கு தயாராகும் காரணம் போன்ற பல்வேறு காரணங்களினால் வெளிநாடுகளைச் சேர்ந்த சில வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ipl trophy

- Advertisement -

மேலும் சில அணிகள் தங்கள் நாட்டு வீரர்கள் தேசிய அணிக்காக விளையாட இருப்பதால் ஐபிஎல் தொடரில் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இன்றி இந்த ஐபிஎல் தொடர் நடைபெறும் என்றும் சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது ஜூலை மாதம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்கள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்கள் ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் வெளிநாட்டு வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால் அணிகளில் வெளிநாட்டு வீரர்களுக்கான வெற்றிடம் இருக்கும். அந்த இடங்களில் தற்போது இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படும் இலங்கை வீரர்கள் நிச்சயம் இடம் பிடித்து விளையாட முடியும்.

SL

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு ஒரு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. ஏற்கனவே இலங்கை அணியில் இருந்து சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தாலும், பெரும்பாலானோருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. கடைசியாக சென்ற ஆண்டு வேகப்பந்துவீச்சாளர் உதானா பெங்களூர் அணிக்காக விளையாடினார். இருப்பினும் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால் பெங்களூர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

sl

அதன்பிறகு ஒரு இலங்கை வீரர் கூட ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் இந்த இந்தியா தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் குஷால் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, ஹசரங்கா, சமீரா ஆகியோர் ஐபிஎல் தொடரில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement