அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை வீரர் – அதிகாரபூர்வ அறிவப்பு

SL
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் எதிர்பாராத வகையில் மிகப் பெரும் சறுக்களை சந்தித்த இலங்கை அணியானது சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

sl

- Advertisement -

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த 31 வயதான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா இந்த டி20 தொடரில் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் அணியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் இலங்கை அணி மீண்டும் நாடு திரும்பும் வரை அவர் அங்கேயே (ஆஸ்திரேலியாவில்) காயத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் ஆன்லைன் டேட்டிங் ஆப் இன் மூலம் 29 வயது இளம் பெண்ணுடன் பழகிய அவர் சிட்னி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவரிடம் அத்துமீறியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதன் காரணமாக நியூஸ் சவுத் வேல்ஸ் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் அளித்திருந்தார். இதன் காரணமாக சிட்னி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்திருந்தனர். இந்த விடயம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

gunathilaka

இந்நிலையில் தன் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு குறித்து மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டிருந்த தனுஷ்கா குணதிலகாவின் ஜாமீன் மனு மறுக்கப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனுஷ்கா குணதிலகாவின் இந்த குற்றச்சாட்டு விவகாரம் குறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

- Advertisement -

தனுஷ்கா குணதிலகாவை அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துக்கது. மேலும் இனிவரும் தொடர்களிலும் அவரது பெயரை அணியில் பரிசீலிக்க போவதில்லை என்று கூறியுள்ளது. மேலும் அவர் மீது எழுப்பப்பட்டுள்ள இந்த புகார் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டு தக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கடுமையாக தங்களது முடிவினை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : செமி பைனலில் விளையாட டிகே – பண்ட் ஆகியோரில் சரியானவர் யார்? 2 காரணங்களை விளக்கும் ரவி சாஸ்திரி

அதோடு இலங்கை அணியைச் சேர்ந்த எந்த ஒரு வீரரும் இவ்வாறு நடந்து கொள்வதை எங்களது கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க தண்டனை கிடைக்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement