19 ரன்ஸ் 7 விக்கெட்.. ஜிம்பாப்வேவுக்கு தண்ணி காட்டிய இலங்கை.. ஹஸரங்கா அபார உலக சாதனை

Wanindu Hasaranga 2
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் இலங்கை போராடி வென்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி ஜனவரி 11ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்றது.

மழையால் இருதரப்புக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த போட்டியில் வென்றால் தான் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் இலங்கையின் ஹஸரங்கா வீசிய மாயாஜால சுழல் பந்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாத ஜிம்பாப்பே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22.5 ஓவரில் வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

மிரட்டிய இலங்கை:
கேப்டன் எர்வின் 0, மில்டன் சும்பா 2, ரியன் பர்ல் 9, சிக்கந்தர் ராசா 10 என அந்த அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கும்பி 29 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் மாயாஜாலம் செய்த இலங்கை சார்பில் அதிகபட்சமாக வணிந்து ஹஸ்ரங்கா 5.5 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 19 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சொல்லப்போனால் இதன் வாயிலாக ஒட்டுமொத்த முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவர்களில் 7 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற அபாரமான உலக சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. வணிந்து ஹசரங்கா : 5.5 ஓவர்கள், ஜிம்பாபேவுக்கு எதிராக, 2024*
2. டேவிட் பய்னே : 6.0 ஓவர்கள், எசக்ஸ் அணிக்கு எதிராக, 2010
3. அபய் நெகி : 6.0 ஓவர்கள், அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 2019

- Advertisement -

அதைத்தொடர்ந்து 97 என்ற சுலபமான இலக்கை துரத்திய இலங்கைக்கு செவன் டேனியல் 12 அபிஷ்கா பெர்னாண்டோ 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் கேப்டன் குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 66* (51) ரன்களும் சமவிக்கிரமா 14* ரன்களும் எடுத்து 16.4 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: டக் அவுட்டானலும் ஷிகர் தவானை முந்தி.. ரோஹித் சர்மா படைத்த தனித்துவ உலக சாதனை

அதனால் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்த தொடரை தங்களுடைய சொந்த மண்ணில் வென்ற இலங்கை கோப்பையை வென்று அசத்தியது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் படுதோல்வியை சந்தித்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை பெற்று மீண்டுள்ள அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதலாகவும் உத்வேகமாகவும் அமைந்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது.

Advertisement