டக் அவுட்டானலும் ஷிகர் தவானை முந்தி.. ரோஹித் சர்மா படைத்த தனித்துவ உலக சாதனை

Rohit Dhawan
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் முகமது நபி 42, ஓமர்சாய் 29 ரன்கள் எடுத்த உதவியுடன் 159 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு ரோகித் சர்மா 0, கில் 23, திலக் வர்மா 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய சிவம் துவே 5 பவுண்டரி 2 சிக்சருடன் 60* (40) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அவருடன் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக 31, ரிங்கு சிங் 16* ரன்கள் எடுத்ததால் 17.3 ஓவரி லேயே இலக்க எட்டி வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சற்று குறைவான ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக 2 ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடியதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறிது. ஆனால் முதல் ஓவரிலேயே கில்லுடன் ஏற்பட்ட தவறான புரிதலால் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் இப்போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்ததால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

- Advertisement -

அதாவது ரோகித் சர்மா தம்முடைய கேரியரில் இதுவரை 149 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 100 முறை இந்தியா வென்றுள்ளது. அந்த வகையில் 100 வெற்றிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ள நிலையில் 2வது இடத்தில் பாகிஸ்தானின் சோயப் மாலிக் (86 வெற்றிகள்) உள்ளார்.

இதையும் படிங்க: ஆரம்பத்தில் கஷ்டமா இருந்துச்சு.. அப்றம் அதை ஃபாலோ பண்ணி ஈஸியா அடிச்சுட்டேன்.. ஆட்டநாயகன் துபே பேட்டி

அத்துடன் இந்த போட்டியின் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்திய வீரர் என்ற ஷிகர் தவானின் சாதனையை உடைத்துள்ள அவர் மற்றுமொரு புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 36 வருடம் 256 நாட்கள்*
2. ஷிகர் தவான் : 36 வருடம் 236 நாட்கள்
3. எம்எஸ் தோனி : 35 வருடம் 52 நாட்கள்

Advertisement