ஆரம்பத்தில் கஷ்டமா இருந்துச்சு.. அப்றம் அதை ஃபாலோ பண்ணி ஈஸியா அடிச்சுட்டேன்.. ஆட்டநாயகன் துபே பேட்டி

Shivam Dube 2.jpeg
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் போராடி 158/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் முகமது நபி 42, ஓமர்சாய் 29 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 159 ரன்களை சேசிங் செய்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 0, கில் 23, திலக் வர்மா 26 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர்.

- Advertisement -

சிவம் துபே கம்பேக்:
இருப்பினும் மிடில் ஆர்டரில் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய சிவம் துபே 5 பவுண்டரி 2 சிக்சருடன் 60* (40) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ஜித்தேஷ் சர்மா 31, ரிங்கு சிங் 16* ரன்கள் எடுத்ததால் 17.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா சிறப்பான வெற்றி பெற்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரகுமான் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 1 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 60 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த வாய்ப்பில் அசத்தியுள்ள அவர் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் ஆரம்பத்தில் சற்று அழுத்தம் இருந்தாலும் பின்னர் தம்முடைய ஸ்டைலில் பேட்டிங் செய்தால் வெற்றி காண முடியும் முடியும் என்பதை பின்பற்றி இப்போட்டியில் அசத்தியதாக சிவம் துபே கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மைதானத்தில் குளிர் அதிகமாக இருந்தது. இருப்பினும் இந்த மைதானத்தில் நான் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தேன். ஆரம்பத்தில் சற்று அழுத்தம் இருந்தது”

இதையும் படிங்க: இதெல்லாம் சாதாரணமா நடக்குற விஷயம் தான்.. அதுல என்ன இருக்கு? வெற்றிக்கு பின் – ரோஹித் சர்மா அளித்த பேட்டி

“அப்போது என்னுடைய ஸ்டைலில் ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் இருந்தது. முதல் 2 – 3 பந்துகளில் நான் அழுத்தத்தை உணர்ந்தேன். ஆனால் அதன் பின் நான் பந்தின் மீது கவனம் செலுத்தினேன். என்னால் பெரிய சிக்சர்கள் அடிக்க முடியும் என்பது எனக்கு தெரியும். அதே போல பந்து வீசுவதற்கு கிடைத்த வாய்ப்பிலும் என்னுடைய திட்டங்களை செயல்படுத்தினேன்” என்று கூறினார்.

Advertisement