5 விக்கெட்ஸ் எடுத்த ரிச்சர்ட்.. டஃப் கொடுத்த ஜிம்பாப்வே.. வெறும் 208 ரன்ஸ் சேசிங்கில் திணறிய இலங்கை

SL vs ZIM
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கொழும்புவில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் முக்கியமான 2வது போட்டியில் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் இலங்கை பவுலர்களுக்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி 50 ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கிரைக் எர்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்களும் ரியன் பர்ல் 31 ரன்களும் ஜாய்லார்ட் கும்பி 30 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

போராடிய இலங்கை:
மறுபுறம் பந்து வீச்சில் நன்றாக செயல்பட்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக மஹீஸ் தீக்சனா 4, சமீரா 2, வேண்டர்சய் 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 209 என்ற சுலபமான இலக்கை துரத்திய இலங்கை மிகவும் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவிஷ்கா பெர்னான்டோ 4, கேப்டன் குசால் மெண்டிஸ் 17 என துவக்க வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த ரிச்சர்ட் ங்கரவா அடுத்ததாக வந்த சமரவிக்கிரமாவையும் 4 ரன்களில் அவுட்டாக்கினார்.

போதாகுறைக்கு அடுத்ததாக வந்த அஸலாங்காவையும் அவர் டக் அவுட்டாக்கியதால் 53/4 என ஆரம்பத்திலேயே இலங்கை திண்டாடியது. அந்த நிலைமையில் இளம் வீரர் ஜனித் லியாங்கே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்ப்புறம் சஹன் ஆர்சிங்கே 21, தசுன் சனாகா 7, மஹீஸ் தீக்சனா 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய லியாங்கே 6 பவுண்டரி 1 சிக்சருடன் சதத்தை தவற விட்டாலும் இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து 95 (127) ரன்கள் விளாசி அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது 172/8 என இலங்கை தடுமாறிய நிலையில் கடைசி நேரத்தில் துஷ்மந்தா சமீரா 18* ரன்களும் ஜெஃப்ரி வேண்டர்சய் அதிரடியான 19* ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

அதனால் தப்பிய இலங்கை 49 ஓவரில் ஒரு வழியாக 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் 250 ரன்களை எடுக்க தவறிய ஜிம்பாப்வே பந்து வீச்சில் போராடிய போதிலும் வெற்றி காண முடியவில்லை. குறிப்பாக அந்த அணிக்கு இளம் வீரர் ரிச்சர்ட் ங்கரவா 10 ஓவரில் 3 மெய்டன் உட்பட 32 ரன்கள் மட்டும் கொடுத்து அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.

Advertisement