ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகையான தொடர்களிலும் பங்கேற்று நாடு திரும்பிய வேளையில் அதனை தொடர்ந்து அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது நாளை மறுதினம் ஜனவரி 11-ம் தேதி துவங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இதுவே இந்திய அணிக்கு கடைசி டி20 தொடர் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ள ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அதன்படி இதுவரை ரோகித் சர்மா 51 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து அவரது தலைமையில் 39 வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும் 12 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று ஒட்டுமொத்தமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3853 ரன்களை குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் 29 அரைசதங்களும் அவர் அடித்துள்ளார். அதேபோன்று அதிகபட்சமாக 118 ரன்கள் விளாசியுள்ளார். இவ்வேளையில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 182 சிக்ஸர்களை விளாசியுள்ள அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தொடரின் மூன்று போட்டியில் 18 சிக்ஸர்களை விலகினால் சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க : சான்ஸ் கொடுத்தா 2023 உ.கோ மாதிரி அந்த தொடர்லயும் நாட்டுக்காக போராடுவேன்.. ஷமி பேட்டி

அதோடு ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 462 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 582 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement