இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த தொடருக்கான ஆதரவு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 18-ஆவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
மும்பை அணிக்குள் வந்தா எல்லாமே நல்லதா நடக்கும் : சூரியகுமார் யாதவ்
அந்த வகையில் இந்த 2025 ஐ.பி.எல் தொடரானது வரும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. அந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியும், ஆர்.சி.பி அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதன் காரணமாக தற்போது பத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் முன்னணி அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்த தொடருக்காக தயாராகி வருகிறது. ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அந்த அணியில் :
கேப்டன் ஹார்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் பல இருப்பதினால் இந்த ஆண்டு அந்த அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் மீண்டும் சாம்பியன் அணியாக திரும்புவார்கள் என்பதனால் இம்முறை தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள அந்த அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் கூறுகையில் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது அது உங்களை ஒரு கல்வி நிறுவனம் போன்று வரவேற்கும்.
இதையும் படிங்க : அவரிடம் அப்படி ஒரு பிளானே இல்ல.. ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த – சுப்மன் கில்
அதாவது நீங்கள் மும்பை அணிக்குள் வருவீர்கள், நிறைய பாடங்களை கற்றுக் கொள்வீர்கள், அதிலிருந்து மிகப்பெரிய வளர்ச்சியை அடைவீர்கள், அதன் பின்னர் இந்திய அணிக்காகவும் விளையாடும் அளவிற்கு செல்வீர்கள் இப்படி மும்பை அணிக்குள் வந்தால் உங்களுடைய வளர்ச்சி தானாகவே நிகழும் என சூரியகுமார் யாதவ் பூரிப்புடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.



