இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய கையோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வழி நடத்தி வரும் அவர் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறவில்லையெனில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கடந்து சில நாட்களாகவே அதிகளவு பேசப்பட்டு வருகிறது.
ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பேசிய சுப்மன் கில் :
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல இருந்த வாய்ப்பை தவறவிட்டதால் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லை எனில் ரோகித் சர்மா தானாக கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இந்த இறுதிப்போட்டி முடிந்தவுடன் ரோகித் சர்மா என்ன முடிவெடுக்க போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து பேசப்பட்டு வரும் செய்திகளுக்கான விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
தற்போது வரை நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவது குறித்தும், சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றுவது குறித்து மட்டுமே பேசி வருகிறோம். ரோகித் சர்மா இதுவரை என்னிடமோ அல்லது அணியின் நிர்வாகத்திடமோ, வீரர்களிடமோ அவரது ஓய்வு குறித்து எதுவும் பேசவில்லை. ரோகித் சர்மாவுக்கு அப்படி ஒரு நினைப்பே இல்லை என்று நான் நினைக்கிறேன் என சுப்மன் கில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 46 ரன் அடிச்சா போதும்.. கிரிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி
இதன் காரணமாக ரோகித் சர்மா தற்போதைக்கு ஓய்வை அறிவிக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவேளை அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் நிச்சயம் இன்னும் சில காலம் சாதாரண வீரராக தொடர விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



