டி20 கிரிக்கெட்டில் நான் களமிறங்க நினைக்கும் இடம் அதுதான். அதுதான் எனக்கு கரெக்ட் – சூரியகுமார் யாதவ் கருத்து

Sky-1
Advertisement

இந்திய அணியின் முன்னணி இளம் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 28 டி20 போட்டிகளில் விளையாடி 811 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இவரது சராசரி 37 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 174 ஆகவும் இருப்பதினால் மிகச் சிறப்பான அதிரடி வீரராக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

sky 2

இதுவரை அவர் விளையாடியுள்ள 28 போட்டிகளில் துவக்க வீரராக நான்கு முறையும், மூன்றாவது வீரராக ஏழு முறையும், நான்காவது வீரராக 12 முறையும், ஐந்தாவது வீரராக மூன்று முறையும் விளையாடி உள்ளார். இப்படி எந்த இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்து அற்புதமாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அவரது இந்த திறன் இந்திய அணிக்கு பெருமளவு கைகொடுத்து வருகிறது. மேலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவர் இந்திய அணியின் வெற்றிக்காக தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தனக்கு எந்த இடத்தில் விளையாட பிடிக்கும் என்பது குறித்து சூரியகுமார் யாதவ் பேசியுள்ளார்.

sky 1

இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்திய அணிக்காக எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் களமிறங்கி விளையாட தயார். ஆனால் நான்காவது இடத்தில் களமிறங்குவது எனக்கு மிகவும் நம்பிக்கையை தருகிறது. ஏனெனில் ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தால் 7 முதல் 15 ஓவர்கள் வரை விளையாடுவது எனக்கு பிடிக்கும்.

- Advertisement -

மிடில் ஓவர்களில் எந்த அணி ரன்களை குவிக்கிறதோ அந்த அணியே வெற்றியை பெறும் என்பதை அனுபவத்தின் மூலம் உணர்கிறேன். சமீப காலமாகவே பவர் பிளேவில் விக்கெட்டுகள் சரிவதனால் நான் நான்காவது இடத்தில் விளையாடுவது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : வீரர்கள் குடும்பம் என்ன நினைக்கும்னு நினைக்க மாட்டிங்களா, ரோஹித் – டிராவிட்டை விளாசும் முன்னாள் வீரர்

7 முதல் 15 ஓவர்கள் வரை என்னால் சிறப்பாக விளையாட முடியும். அப்படி நான் விளையாடி கொடுக்கும் பட்சத்தில் மீதம் உள்ள ஓவர்களை பினிஷர்கள் பார்த்துக் கொள்வார்கள். எனவே டி20 கிரிக்கெட்டில் நான் நான்காவது இடத்தில் களமிறங்கவே ஆசைப்படுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement