வீரர்கள் குடும்பம் என்ன நினைக்கும்னு நினைக்க மாட்டிங்களா, ரோஹித் – டிராவிட்டை விளாசும் முன்னாள் வீரர்

dravid
- Advertisement -

கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு புதிய முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மாவுக்கு துணையாக பயிற்சியாளராக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். அவர்களது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வந்த இந்தியா உலகின் நம்பர் ஒன் 20 அணியாக முன்னேறியதால் இம்முறை உலகக்கோப்பை நமதே என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

IND vs SL

- Advertisement -

ஆனால் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற 2022 ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் வென்ற நடப்பு சாம்பியன் இந்தியா வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெறுங்கையுடன் நாடு திரும்பியது. அதனால் இங்கேயே இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்ட இந்தியா ஆஸ்திரேலியாவில் எங்கே உலகக்கோப்பையை வெல்லப்போகிறது என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக உலக கோப்பையில் விளையாடும் தரமான வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்களை நிகழ்த்தியது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அதற்கு மிடில் ஆர்டரில் அட்டகாசமாக விளையாடக்கூடிய சூர்யகுமார் யாதவை தீபக் ஹூடா, சஞ்சு சம்சான் ஆகியோர் இருந்தும் தொடக்க வீரராக களமிறக்கியதை எடுத்துக்காட்டாக கூறலாம்.

dravid 1

தொடரும் மாற்றங்கள்:
சரி இருதரப்பு தொடரில் சோதனைகள் செய்வதில் தவறில்லை என்பதால் அனைவரும் அந்த மாற்றங்களை பொறுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரில் ஜடேஜா என்ற ஒருவர் காயமடைந்ததற்காக வெற்றி அணியை கலைத்து தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டு செய்த 3 மாற்றங்கள் தோல்விகளை பரிசளித்தது. அதைவிட ஆவேஷ் கானை நீக்கும்போது தேர்வு செய்ய எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்திய அவல நிலையையும் தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

இதை ஏன் என்று கேட்டால் உலக கோப்பைக்கு முன்பாக சோதனை முயற்சி என்று கேப்டன் ரோகித் சர்மா கூலாக பதிலளித்தது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது. இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக மாற்றங்களை செய்யும் போது அதிரடியாக நீக்கப்படும் வீரர்களின் குடும்பம் அந்த செய்தியை படித்து அதிர்ச்சியடைவதைப் பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்களா என்று ரோஹித் – டிராவிட் ஆகியோரை முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா விமர்சித்துள்ளார். மேலும் இது போன்ற தேவையற்ற மாற்றங்கள் அணியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Ajay

“நீங்கள் உங்களது பயணத்தை தொடரலாம். ஆனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு தொடருக்கு பின்பும் மாற்றங்களை செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும். இந்திய கிரிக்கெட்டில் நடைபெற்று வரும் இந்த பழைய கதையை இப்போதாவது தவிர்க்கலாம். கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் கூட புரிதல் இருப்பது அவசியமாகும். இது நாங்கள் கேப்டனாக இல்லை அல்லது நாங்கள் செய்தியாளர்கள் சந்திப்புகளில் பங்கேற்க மாட்டோம் என்பது போல் கிடையாது. சில சமயங்களில் இது போன்ற மாற்றங்களை பற்றி நீங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்க வேண்டும் ஏனெனில் அது முக்கியமானதாக இருக்கலாம்”

- Advertisement -

“ஆனால் உங்களது அணிக்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது தெளிவாக தெரியும். அந்த வகையில் அணிக்குள் இருக்கும் வீரர்களிடையே உங்களுடைய தொடர்புகள் வலுவானதாக இருக்க வேண்டும். அதை செய்தியாளர்கள் சந்திப்பில் நிரூபிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமாகும். ஆனால் உங்களது அணியில் மாற்றங்களால் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. குறிப்பாக இதை நாங்கள் முயற்சிக்கிறோம் என்பது போன்ற கருத்துகள் உங்களிடமிருந்து வரக்கூடாது”

இதையும் படிங்க : டி20 உ.கோப்பையில் அவர் இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு தான் – மகிளா ஜெயவர்தனே கருத்து

“அதிலும் இந்திய வீரர்களுக்கு குடும்பங்கள் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களைப் பற்றி அவர்களுடைய குடும்பம் செய்திகளாக படிக்கும்போது மிகவும் வருத்தமடைவார்கள். எனவே அணிக்குள் எந்த விவாதங்களை வைத்திருந்தாலும் செய்தியாளர்களுக்கு முன்பாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் ஒரே மாதிரியாக பேச வேண்டும்” என்று கூறினார்.

Advertisement