டி20 உ.கோப்பையில் அவர் இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு தான் – மகிளா ஜெயவர்தனே கருத்து

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஏற்கனவே காயத்தால் விலகியதால் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திக்க நேரிட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் குணமடைந்து திரும்பினாலும் நம்பிக்கை நட்சத்திர முதன்மை சுழல்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ரவீந்திர ஜடேஜா சூப்பர் 4 சுற்றில் காயத்தால் வெளியேறியது தான் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

Ravindra-Jadeja

- Advertisement -

ஏனெனில் அவர் வெளியேறியதால் தீபக் ஹூடாவை மட்டும் சேர்க்கவேண்டிய கேப்டன் ரோகித் சர்மா தேவையின்றி தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டதால் கிடைத்த அடுத்தடுத்த தோல்விகள் பைனலுக்கு கூட செல்ல முடியாமல் வீட்டுக்கு கிளம்ப வேண்டிய பரிதாபத்தை ஏற்படுத்தியது. அந்தளவுக்கு முக்கிய வீரராக போற்றப்படும் ஜடேஜா கடந்த 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கடுமையாக போராடி கிட்டதட்ட வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த இன்னிங்ஸ் முதல் பேட்டிங்கில் மிகப்பெரிய எழுச்சி கண்டு உலக அளவில் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ளார்.

மிகப்பெரிய இழப்பு:
இருப்பினும் 2022 ஐபிஎல் தொடரில் வழங்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பால் ஏற்பட்ட அழுத்தத்தில் பார்மை இழந்த அவர் காயத்தால் வெளியேறி அதைத்தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் சதமடித்து பார்முக்கு திரும்பினார். அதனால் ஒரு கட்டத்தில் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என்று வந்த செய்திகளை பொய்யாக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களிலும் அசத்திய அவர் இந்த ஆசிய கோப்பையின் போது புத்துணர்ச்சி அடைவதற்காக நீச்சல் குளத்தில் அலைச்சறுக்கு செய்யும்போது தேவையின்றி தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு வெளியேறியுள்ளது அவருக்கும் இந்திய அணிக்கும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Ravindra Jadeja Hardik Pandya

இந்நிலையில் அக்சர் படேல், தீபக் ஹூடா ஆகியோர் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் நிறைந்த ரவீந்திர ஜடேஜா உலக கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என இலங்கை ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலான நேரமாகும். ஏனெனில் அவர்கள் 5வது இடத்தில் ஜடேஜாவை வைத்து விளையாட இறுதி முடிவெடுத்திருந்தார்கள். மிகச் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடிய அவரும் ஹர்திக் பாண்டியாவும் டாப் 6 இடங்களுக்குள் 2 ஆல்-ரவுண்டர்களாக இருப்பது இந்திய பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தக்கூடியது”

- Advertisement -

“ஆனால் தற்போது அவர் விலகியுள்ளது இந்தியாவுக்கு குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்கள் எண்ணிக்கையில் கடினத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டு 5 அல்லது 4வது இடத்தில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் இந்த விஷயத்தில் உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா இறுதிக்கட்ட முடிவை எடுக்க வேண்டும். ஆனால் எப்படியிருந்தாலும் தற்போதுள்ள ஃபார்முக்கு ஜடேஜா இல்லாதது இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பாகும்” என்று கூறினார்.

Jayawardene

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து பார்முக்கு திரும்பியது ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது இந்தியாவுக்கு பலத்தை சேர்கிறது என்று தெரிவிக்கும் ஜெயவர்தனே இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் பெரிய ஸ்கோர்களை அடிக்காமல் இருந்தது அவருடைய தன்னம்பிக்கைக்கு தடையாக இருந்தது. மேலும் கடந்த 12 மாதங்களில் அவ்வப்போது லேசான காயத்தை சந்தித்த அவருக்கு இந்திய நிர்வாகம் சிறந்த முறையில் ஓய்வை கொடுத்தது”

இதையும் படிங்க : ரோஹித், விராட் கோலியை விட திறமையானர் – கேஎல் ராகுல் விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் ஆதரவுடன் பதிலடி

“அதனால் இந்த ஆசிய கோப்பையில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாகவும் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பவராகவும் திகழ்கிறார். இந்த ஆசிய கோப்பையில் அவர் பேட்டிங் செய்ததை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் உலகின் சிறந்த வீரர்கள் நல்ல பார்மில் இருப்பது அவசியமாகும். அப்படி தரமான வீரர்கள் போட்டி போடுவது தான் உலக கோப்பைக்கு தேவைப்படுகிறது. எனவே ஆஸ்திரேலியாவில் நமக்கு மிகச் சிறப்பான உலககோப்பை விருந்து படைக்க காத்திருக்கிறது” என்று கூறினார்.

Advertisement