ரோஹித், விராட் கோலியை விட திறமையானர் – கேஎல் ராகுல் விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் ஆதரவுடன் பதிலடி

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் துணைக் கேப்டனாக கேஎல் ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளது நிறைய ரசிகர்களுக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது. கடந்த 2019க்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் லேட்டஸ்ட் ரன் மெஷினாக ரன்களை குவிக்கத் தொடங்கிய அவர் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக நிலையான இடத்தைப் பிடித்தார். அதனால் அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்தை எட்டியதால் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக சமீப காலங்களில் பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் களமிறங்கும் அவர் அணியின் வெற்றியை பற்றி கவலைப்படாமல் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்வது இறுதியில் தோல்வியை பரிசளிக்கிறது.

IND vs PAk Rahul Hardik Pandya

அதனால் சமீப காலங்களாகவே அவரது சுயநல ஆட்டத்தை ஆதாரத்துடன் ரசிகர்கள் அம்பலப்படுத்தி வரும் நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்குப்பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக களமிறங்கிய அவர் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் கத்துக்குட்டி ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது ரசிகர்களை அதிருப்தியின் உச்சத்திற்கு கொண்டு வந்தது. அதனால் அவரை அதிரடியாக நீக்கி விட்டு பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் காணப்படுகின்றன.

- Advertisement -

கம்பீர் ஆதரவு:
இருப்பினும் ஏற்கனவே க்ளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனாக நல்ல பார்மில் இருந்த அவர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவதால் பழைய ஃபார்முக்கு திரும்ப சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக சுனில் கவாஸ்கர், கிரண் மோர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விட ராகுல் திறமையானவர் என்று பாராட்டுக்களுடன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இத்தனை நாட்களாக சதமடிக்கவில்லை என்பதற்காக விராட் கோலியை வறுத்தெடுத்த விமர்சகர்கள் தற்போது ராகுல் பக்கம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது.

KL Rahul

“இந்தியாவில் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? இங்கு ஒருவர் சிறப்பாக செயல்படத் துவங்கும்போது எடுத்துக்காட்டாக தனது கடைசி போட்டியில் விராட் கோலி சதமடித்து விட்டதால் தற்போது நாம் அனைவரும் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் நீண்ட காலமாக வெளிப்படுத்திய சிறப்பான செயல்பாடுகளை மறந்துவிட்டோம். அதிலும் தொடக்க வீரராக விராட் கோலி களமிறங்க வேண்டும் என்று நீங்கள் பேசும்போது ராகுலுக்கு என்ன நடக்கும் தெரியுமா? அது போன்ற பேச்சுகள் அவருக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால் அடுத்த போட்டியில் அவர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தால் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற பேச்சுக்கள் அதிகமாக எழுந்து விடும்”

- Advertisement -

“ஆனால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விட அதிகப்படியான திறமையை பெற்றுள்ள ராகுல் போன்ற டாப் கிளாஸ் பிளேயர் அது போன்ற நிலைமையை சந்திக்க கூடாது. அதிலும் “பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் நாம் ரன்கள் அடிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? ஒருவேளை என்னுடைய இடத்தில் விராட் கோலி வந்துவிட்டால் என்னுடைய நிலைமை என்ன ஆகும்?” என்ற எண்ணங்களுடன் அவர் களமிறங்க கூடாது. எனவே இது போன்ற கேள்விகளை முதலில் நாம் எழுப்பவே கூடாது. மாறாக இந்தியாவின் பார்வையிலும் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது பார்வையிலும் நீங்கள் பாருங்கள்”

Gambhir

இதையும் படிங்க: ஏற்கனவே 2 முறை நடந்திருச்சு. இம்முறையும் நடக்கும். இந்திய அணிக்கு – பாக் தேர்வுக்குழு தலைவர் எச்சரிக்கை

“அதுவும் தற்போது கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால் ராகுல் சந்தித்துள்ள அதே விமர்சனங்களை இந்நேரம் சந்தித்திருக்க வேண்டும். எனவே அணியில் விளையாடும் வீரர்கள் தங்களது சொந்த இடத்தை பற்றி கவலைப்படாமல் இந்தியாவை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று யோசிப்பதற்கு முதலில் இது போன்ற விமர்சனங்களை நாம் அவர்களுக்கு கொடுக்க கூடாது” என்று கூறினார்.

Advertisement