ஏற்கனவே 2 முறை நடந்திருச்சு. இம்முறையும் நடக்கும். இந்திய அணிக்கு – பாக் தேர்வுக்குழு தலைவர் எச்சரிக்கை

Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 24ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு இப்போது முதலே எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. ஆசிய கண்டத்தின் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எல்லை பிரச்சினை காரணமாக இரு தரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அதனால் 2 வருடத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருமுறை மோதுவதால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு உலக அளவில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக என்னதான் இந்தியாவுக்கு சரிசமமான பலத்தை கொண்ட அணியாக இருந்தாலும் 1992 முதல் உலக கோப்பைகளில் களமிறங்கிய அத்தனை போட்டிகளிலும் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தோற்று வந்தது.

அந்தக் கதைக்கு கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது. அதனால் மிகப்பெரிய நிம்மதியும் புத்துணர்வு பெற்ற அந்த அணியிடம் சந்தித்த அவமான தோல்விக்கு அதே துபாய் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையின் லீக் சுற்றில் வென்று இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. ஆனால் அடுத்த வாரமே அதே துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் மீண்டும் வென்று பதிலடி கொடுத்த பாகிஸ்தான் நடப்புச் சாம்பியனான இந்தியாவை பைனலுக்கு செல்ல  விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

- Advertisement -

வெற்றிநடை தொடரும்:
அதனால் மீண்டும் புதிய தெம்பைத் பெற்றுள்ள பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையிலும் வெல்வதற்கு தயாராகி வருகிறது. அதற்கேற்றார் போல் உலக கோப்பையில் பங்கேற்க பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாஹீன் அப்ரிடி காயத்திலிருந்து திரும்பியுள்ளது பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது. முன்னதாக ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தாலும் பைனலில் இலங்கையிடம் தோல்வியடைய காரணமாக இருந்த கிட்டதட்ட அதே வீரர்கள் பாகிஸ்தான் உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் சோயப் மாலிக் போன்ற மூத்த வீரரை கழற்றிவிட்டு சுமாரான பார்மில் உள்ள வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு முன்னாள் வீரர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஆனால் இதே அணிதான் பணக்கார இந்திய அணியை தோற்கடித்ததாக தெரிவிக்கும் பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் இந்த அணி மீது நம்பிக்கை வைத்தால் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து உலக கோப்பையை வெல்லும் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா ஒரு பில்லியன் டாலர் பணக்கார அணியாகும். ஆனால் கடந்த வருட உலகக் கோப்பையிலும் இந்த வருட ஆசிய கோப்பையிலும் இந்த பாகிஸ்தான் அணியால் அவர்களை தோற்கடிக்க முடியும் என்பதை நாங்கள் காட்டினோம். அந்த வகையில் இந்த அணி உலக கோப்பையிலும் இந்தியா போன்ற எதிரணிகளை தோற்கடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்”

“அத்துடன் நீங்கள் குறைகளை மட்டும் பார்க்காமல் கடந்த வருட உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடியதையும் இந்த வருட ஆசிய கோப்பை ஃபைனல் வரை விளையாடியதையும் பாராட்டி நேர்மறையாக பார்க்க வேண்டும். எனவே ஒரு சில சுமாரான செயல்பாடுகளை வைத்து இந்த அணி சுமாரானது என்று அனைவரும் விமர்சிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது வரலாற்றில் இதற்கு முந்தைய வலுவான பாகிஸ்தான் அணிகளை விட தற்போதைய பாகிஸ்தான் அணி இந்தியா போன்ற உலகின் நம்பர் ஒன் டி20 அணியை எளிதாக தோற்கடிக்கும் திறமை பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர் இலங்கையிடம் தோல்வி அடைந்ததற்காக நமது அணியை நாமே குறைத்து எடை போடக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அவர்தான் உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டர் – மனதார புகழ்ந்து தள்ளிய ரவி சாஸ்திரி

மேலும் சமீப காலங்களில் இந்தியாவை தோற்கடித்தது போல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பையிலும் வென்று பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்யும் அளவுக்கு தற்போது அணியில் பலமும் திறமையும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement