
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்று விளையாடிய 2025-ஆம் ஆண்டிற்கான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு அணியிடமும் தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதிலும் குறிப்பாக இந்த ஆசிய கோப்பை தொடரில் மட்டும் மூன்று முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று இந்த கோப்பையை வென்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன தான் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தாலும் ஒரு பக்கம் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் இந்த தொடரில் அப்பட்டமாக தெரிந்தது. கேப்டனாக அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் பேட்டிங்கில் அவர் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 72 ரன்களை மட்டுமே குவித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 47 ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்த அவர் மற்ற 6 போட்டிகளில் வெறும் 25 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றத்தை அளித்திருந்தார். இப்படி தனிப்பட்ட வகையில் சூரியகுமார் யாதவ் மோசமாக விளையாடியது அவரது பேட்டிங் ஃபார்ம் மீது கேள்வியை எழுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு தனது பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசியிருந்த சூரியகுமார் யாதவ் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இந்த தொடரில் ஃபார்ம் அவுட்டாக இருப்பதாக நினைக்கவில்லை. ஏனெனில் நான் இந்த தொடரில் ரன்களை மட்டும் தான் குவிக்கவில்லை. மற்றபடி நான் பார்ம் அவுட் எல்லாம் கிடையாது. வலை பயிற்சியில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்கிறேன். போட்டிக்காக எவ்வாறு தயாராக வேண்டும் என்பதையும் சரியாக செய்து வருகிறேன்.
இதையும் படிங்க : அவரோட சேர்ந்து விளையாடும் போது அப்படியே கே.கே.ஆர் டீம் நியாபத்துக்கு வந்துடுச்சி – வருண் சக்கரவர்த்தி
எனவே நிச்சயம் இனி வரும் போட்டிகளில் என்னுடைய பேட்டிங்கில் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிவரும். இந்த தொடரில் என்னால் ரன்களை குவிக்க முடியவில்லை என்பதால் நான் பார்ம் அவுட் எல்லாம் கிடையாது. நிச்சயம் தேவையான நேரத்தில் மிகச்சிறப்பான இன்னிங்ஸ் வரும் என்று சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.