நான் பேட்டிங் செய்த போது பொல்லார்ட் என்கிட்ட வந்து அந்த ஷாட்டை விளையாட சொன்னாரு – சூரியகுமார் யாதவ்

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

INDvsWI

- Advertisement -

அதன்படி தங்களது முதல் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களை கூட முழுவதுமாக விளையாட முடியாமல் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 57 ரன்களையும், ஆலன் 29 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக சாகல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

அடுத்ததாக 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 178 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

sky 1

இஷான் கிஷன் 28 ரன்களிலும், விராட் கோலி 8 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 11 ரன்களும் குவித்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதியில் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தும், தீபக் ஹூடா 32 பந்துகளை சந்தித்த நிலையில் 2 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் போட்டி முடிந்து இந்த ஆட்டம் குறித்து பேசிய இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : தீபக் ஹூடாவை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்ததால் நல்ல பார்மில் இருக்கிறார். எனவே இந்த சூழ்நிலையை புரிந்து அவருடன் நான் விளையாட முடியும் என்று நினைத்தேன். மேலும் நாங்கள் இருவரும் போட்டி முடிவு வரை சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து விளையாடினோம்.

இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு. சோகத்தில் குடும்பம் – ஆறுதல் கூறிவரும் பிரபலங்கள்

அந்த வகையில் இந்த போட்டியில் நான் வலைப்பயிற்சியில் விளையாடியது போலவே மிகவும் ரசித்து விளையாடினேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் என்னிடம் வந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவது போல மிட் விக்கெட் திசையில் பிலிக் ஷாக் ஆடும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் நான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்து விளையாடியதாக சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Advertisement