47 பந்துகளில் 120 ரன்கள். மீண்டும் பயிற்சி போட்டியில் வெளுத்துக்கட்டிய இந்திய வீரர் – இப்பயாவது வாய்ப்பு கிடைக்குமா ?

Arjun
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் உள்ளூர் போட்டிகளிலும் அசத்தலாக விளையாடி வந்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இன்றளவும் தவித்து வருகிறார். உள்ளூர் போட்டிகளில் பலமுறை தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் ஆடிய அதிரடி ஆட்டங்கள் அவரை லைம் லைட்டுக்கு கொண்டு வந்தன.

sky 2

- Advertisement -

மேலும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கூட 480 ரன்களை விளாசியுள்ளார். இதில் நான்கு அரை சதங்களையும் அவர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு பினிஷராக எடுத்துச் சென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். இப்படி தன்னுடைய திறமையால் ரசிகர்களின் மனதை பிடித்த இவரால் இந்திய அணியில் இடத்தை பிடிக்க முடியவில்லை.

போதுமான அளவு தனது பேட்டிங் திறமையை நிரூபித்த போதும் அவர் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தம் உள்ளது. அதேபோன்று அவருக்கும் இந்த விஷயத்தில் அதிருப்தி நிச்சயம் இருக்கும். ஆனாலும் அவர் மனம் நோகாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சில கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.

sky

இந்நிலையில் தற்போது மீண்டும் சூர்யகுமார் யாதவ் குறித்த செய்தி லைம் லைட்டிற்கு வந்து உள்ளார். அதற்கு காரணம் யாதெனில் சையது முஷ்டாக் அலி தொடருக்கான பயிற்சி போட்டியில் அவர் 47 பந்துகளில் 120 ரன்கள் விளாசி தள்ளியுள்ளார். அதுமட்டுமின்றி சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய ஒரே ஓவரில் 21 ரன்கள் குவித்து அவரது ஓவரை பிரித்தெடுத்தார். சூர்யகுமார் யாதவ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வல் ஆகியோர் தலைமையிலான அணிகள் நேற்று மோதின.

ArjunTendulkar

இந்த பயிற்சி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ருத்ர தாண்டவம் ஆட 20 ஓவர்களின் முடிவில் அவரது அணி 5 விக்கெட்களை இழந்து 213 ரன்கள் குவித்தது. 2010ஆம் ஆண்டிலிருந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் இதுவரை 77 போட்டிகளில் விளையாடி 5326 ரன்களை குவித்துள்ளார். இதில் 14 சதங்களும், 26 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல் போட்டிகளில் 101 போட்டிகளில் விளையாடி 2024 ரன்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement