
கடந்த எட்டு நாட்களுக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் போது கடைசி ஓவரில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்சை இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் சாமர்த்தியமாக செயல்பட்டு அதனை பிடித்தது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தார்.
அவர் பிடித்த அந்த கேட்ச் தான் டி20 உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தது என பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் டி20 உலக கோப்பையில் தான் பிடித்தது தனது வாழ்க்கையின் முக்கியமான கேட்ச் அல்ல என்று தனது சமூக வலைதள பக்கத்தில் சூரியகுமார் யாதவ் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் சூரியகுமார் மற்றும் தேவிஷா ஷெட்டி ஆகியோரது திருமண நாள் புகைப்படத்தை பதிவு செய்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் எங்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
டி20 உலக கோப்பையில் நான் பிடித்த அந்த கேட்சு நேற்றுடன் எட்டு நாட்களை நிறைவு செய்தது. ஆனால் என்னுடைய வாழ்நாளின் முக்கியமான கேட்சை நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பிடித்து விட்டதாக தனது திருமண வாழ்த்தை அவர் பகிர்ந்துள்ளார்.
சூரியகுமார் யாதவ் பகிர்ந்துள்ள இந்த பதிவானது ஆறு மணி நேரத்திலேயே ஏழு லட்சம் லைக்ஸ்களுக்கு மேல் பெற்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தித்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் தேவிஷா சாகியோர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நானும் தான் விமர்சித்தேன்.. ஆனா இந்தியாவுக்காக அவர் ஸ்பெஷலா சாதிச்சுட்டாரு.. இர்பான் பதான் பாராட்டு
டி20 உலககோப்பை தொடரில் இடம்பிடித்து விளையாடி வந்த சூரியகுமார் யாதவிற்கு தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.