ஆஸ்திரேலிய மைதானத்தில் முதன்முறையாக விளையாடிய சூரியகுமார் யாதவின் ஆட்டம் எப்படி இருந்தது? – தகவல் இதோ

Suryakumar Yadav 1
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ள இந்திய அணியானது தற்போது உள்ளூர் அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பாதி வீரர்கள் ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை விளையாடாத வீரர்கள் என்பதினால் ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி முன்கூட்டியே கடந்த 6-ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்து தற்போது தொடர்ச்சியாக பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma

- Advertisement -

அப்படி பெர்த் நகருக்கு சென்றடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் முதற்கட்ட பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த வேளையில் தற்போது உள்ளூர் அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி வீரர்கள் விளையாடினர். இந்த போட்டியில் முக்கிய வீரர்களான ராகுல், கோலி, அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் விளையாடினர்.

இதில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய அணியில் பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை விளையாடியதில்லை என்கிற காரணத்தினால் இம்முறை அங்கு அவர் எவ்வாறு விளையாடுவார்? என்பது குறித்த கேள்விகள் அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் அந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பயிற்சி போட்டியிலேயே தனது அதிரடியை காண்பித்து தனது வருகையை ஆஸ்திரேலியாவிற்கும் அவர் காண்பித்துள்ளார்.

Sky-1

அந்த வகையில் இன்றைய பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் மூன்று சிக்சர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் என 52 ரன்கள் எடுத்து தெறிக்க விட்டார். இந்திய மைதானங்களிலும் இன்னும் ஒரு சில வெளிநாடுகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் எவ்வாறு விளையாடுவார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய மைதானத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி போட்டியில் அங்கும் சூரியகுமார் யாதவ் சிக்ஸர்களை பறக்கவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி அடுத்ததாக அக்டோபர் 12-ஆம் தேதி மற்றொரு உள்நாட்டு அணியுடன் பயிற்சி போட்டியில் மோத இருக்கிறது. அதன் பின்னர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராகவும் பயிற்சி போட்டியில் மோதுகிறது.

இதையும் படிங்க : IND vs SA : 3வது போட்டி நடக்கும் டெல்லி மைதானம் எப்படி? – புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

இப்படி ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை முதல் போட்டியிலேயே சூரியகுமார் யாதவ் வெளிப்படுத்தியுள்ளதால் நிச்சயம் அவர் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement