IND vs SA : 3வது போட்டி நடக்கும் டெல்லி மைதானம் எப்படி? – புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Delhi Cricket Stadium
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் வென்று 1 – 1* என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் அணி இத்தொடரில் விளையாடுகிறது.

அந்த நிலையில் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் கொதித்தெழுந்து பதிலடி கொடுத்துள்ள இளம் அணி அக்டோபர் 11ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் நடைபெறும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் கடைசி மூச்சாக கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. முன்னதாக சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இதே இளம் இந்திய அணி 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது.

- Advertisement -

டெல்லி மைதானம்:
அப்படி வெளிநாடுகளில் வெற்றி வாகை சூடிய இளம் அணி சொந்த மண்ணில் நடைபெறும் இப்போட்டியில் வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பலாம். இந்த முக்கியமான 3வது போட்டி டெல்லியில் இருக்கும் அருண் ஜேட்லி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. 1883இல் தோற்றுவிக்கப்பட்டு பெரோஸ் ஷா கோட்லா என்றழைக்கப்பட்ட இம்மைதானம இந்தியாவின் பழமையான மைதானங்களில் ஒன்றான இருப்பதுடன் 40000+ ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. கடந்த 1982 முதல் நிறைய மறக்க முடியாத போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் இதுவரை 26 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 12 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் 12 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

- Advertisement -

2. இங்கு வரலாற்றில் 20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 12 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. மறுபுறம் இங்கு ஒருமுறை வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டு வென்றுள்ள தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக இப்போது இந்தியாவை எதிர்கொள்கிறது.

புள்ளிவிவரங்கள்:
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்:
1. சச்சின் டெண்டுல்கர் : 300
2. முகமது அசாருதீன் : 268
3. எம்எஸ் தோனி : 260

- Advertisement -

இங்கு சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், விராட்கோலி, கேன் வில்லியம்சன், ஏபி டிவில்லியர்ஸ், நிக் நைட், ராய் தியாஸ், உஸ்மான் கவாஜா ஆகியோர் அதிகபட்சமாக தலா 1 சதங்கள் அடித்துள்ளனர். மேலும் முகமது அசாருதீன், திலிப் வெங்சர்க்கார், ராமன் லம்பா ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 அரை சதங்கள் அடித்துள்ளனர்.

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 9 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ள பவுலர்: கிமர் ரோச் – 6/27.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் டெல்லியில் போட்டி துவங்கும் 1.30 மணிக்கு 30 – 40% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் இந்திய வானிலை மையம் நேரம் செல்லசெல்ல அது 15 – 10% என குறையும் என்று அறிவித்துள்ளது. எனவே இப்போட்டி சற்று தாமதமாக துவங்கும் பட்சத்தில் அதற்கேற்றார்போல் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு நிச்சயம் கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
வரலாற்றில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வந்த டெல்லி மைதானம் ஐபிஎல் 2021இல் முற்றிலுமாக மாறியது. ஏனெனில் அந்த சீசனில் இங்கு நடைபெற்ற 4 போட்டிகளில் சராசரியாக 195 ரன்கள் அடிக்கப்பட்டு அதில் 3 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றது. கடந்த ஜூன் மாதம் இந்தியா – தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிய டி20 போட்டியிலும் இங்கு பேட்ஸ்மேன்கள ரன்மழை பொழிந்தனர். அந்த வகையில் சமீப காலங்களில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லைகளும் சிறியதாகும்.

இதையும் படிங்க : உள்ளூர் அணிக்கெதிரா விளையாடும்போது கூடவா இப்படி நடக்கனும் – இந்திய அணியின் பரிதாப நிலை

அதனால் இந்தப் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் மேகமூட்டம் காணப்படும் என்பதால் வழக்கமாக புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம். மேலும் இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் சராசரி ஸ்கோர் 241 ஆகும். அதைவிட டெல்லியில் எது மாறினாலும் பனியின் தாக்கம் மாறவே மாறாது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் இங்கு முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement