உள்ளூர் அணிக்கெதிரா விளையாடும்போது கூடவா இப்படி நடக்கனும் – இந்திய அணியின் பரிதாப நிலை

Practice
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவிற்கு பயணித்து பெர்த் நகரில் நடைபெற்று வரும் பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் சர்வதேச அணிகளுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவில் உள்ள உள்ளூர் அணிகளுடன் இந்திய அணி தற்போது பயிற்சி செய்து வருகிறது. அந்த வகையில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற ஒரு பயிற்சி போட்டியின் போது இந்திய அணி விளையாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

INDIA Arshdeep Singh Harshal Patel

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மையையும், அங்குள்ள சூழ்நிலையும் புரிந்து கொள்வதற்காக முன்கூட்டியே அங்கு சென்று தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 7-8 வீரர்கள் புதிதாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட இருப்பதினால் தேவையான அளவு அங்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்திய அணி முன்கூட்டியே அங்கு பயணித்தது தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

அப்படி இன்று உள்ளூர் வெஸ்டர்ன் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய இந்திய அணியில் ராகுல், கோலி மற்றும் அஷ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களை தவிர்த்து மற்றவீரர்கள் இந்த பயிற்சி போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை அடுத்தடுத்து இழந்தது. அதேபோன்று தீபக் ஹூடாவும் விரைவில் ஆட்டம் இழக்கவே வழக்கம் போலவே சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரே இம்முறையும் இந்திய அணியை காப்பாற்றினார்.

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 52 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 29 ரன்களையும், தினேஷ் கார்த்திக் ஓரளவு அதிரடியாக விளையாடவே இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பவர்பிளேவிற்கு உள்ளேயே 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று நினைத்த வேளையில் அதன்பின்னர் மிகப்பெரிய ஏமாற்றத்தை பவுலர்கள் வழங்கினர். ஏனெனில் நான்கு விக்கெட்டுகளை 12 ரன்களுக்குள் வீழ்த்தியதால் எளிதில் அந்த அணியை இந்திய அணியின் பவுலர்கள் சுருட்டி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : IND vs RSA : தோனியின் சொந்த ஊரில் ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தியுள்ள சாதனை – சிறப்பான சம்பவம்

ஆனால் இறுதிவரை அந்த அணியை விளையாடவிட்ட இந்திய பவுலர்கள் 145 ரன்கள் வரை அடிக்க விட்டுவிட்டனர். இந்த போட்டியில் உள்ளூர் அணியை கூட இந்திய அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement