IND vs RSA : தோனியின் சொந்த ஊரில் ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தியுள்ள சாதனை – சிறப்பான சம்பவம்

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று (1-1) என்கிற கணக்கில் தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக நாளை நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்தது.

பின்னர் 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 45.5 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 282 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்தார்.

Shreyas Iyer

அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் விராட் கோலியுடன் ஒரு குறிப்பிட்ட சாதனையில் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது இணைந்துள்ளார். அந்த வகையில் இதுவரை ராஞ்சி மைதானத்தில் விராட் கோலி மட்டுமே இந்திய வீரராக சதம் அடித்துள்ளார். விராட் கோலி ஏற்கனவே ராஞ்சி மைதானத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 139 ரன்களை அந்த மைதானத்தில் குவித்து இருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 123 ரன்கள் குவித்து இருந்தார். இப்படி தோனியின் சொந்த ஊரான ராஞ்சி மைதானத்தில் விராட் கோலி மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரராக இரண்டு சதங்களை விளாசி இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்த மைதானத்தில் அடித்த சதத்தின் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் ராஞ்சி மைதானத்தில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : நான் பவுலரை பாத்து பயப்பட மாட்டேன். நான் நம்புறது இதை மட்டும் தான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

மேலும் இவர்கள் இருவரை தவிர்த்து வெளிநாட்டு வீரர்களாக இலங்கையைச் சேர்ந்த ஆஞ்ஜிலோ மேத்யூஸ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த உஸ்மான் கவஜா ஆகிய இருவரும் அந்த மைதானத்தில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement