இலங்கை அணிக்கெதிரான கடைசி போட்டியில் 2 முக்கிய மாற்றங்களை செய்த கேப்டன் – டாசுக்கு பிறகு அறிவிப்பு

SKY Toss
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-ஆவது கடைசி லீக் போட்டியானது இன்று (செப்டம்பர் 26) துபாய் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். இதன் காரணமாக தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் :

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்திய அணியானது எந்த ஒரு போட்டியிலும் தோல்வியையே சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வருவதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது உறுதி.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி பெரும்பாலும் பிளேயிங் லெவனை மாற்றாமல் விளையாடி வரும் வேளையில் ஒரு சில போட்டிகளின் போது தேவையான வீரர்களுக்கு ஓய்வு வழங்கி பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் இறுதிப் போட்டிக்கு முந்தைய இந்த கடைசி ஆட்டத்தில் இரண்டு மாற்றங்களை இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் செய்துள்ளார்.

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய இருவரும் விளையாடுவதாக அறிவித்தார். அதனை தவிர்த்து மற்றபடி வேறுயெந்த மாற்றமும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இல்லை.

- Advertisement -

இன்றைய போட்டியில் ஓய்வெடுக்கும் வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு திரும்பி விடுவார்கள் என்றும் தெரிகிறது. அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்த ஆசிய கோப்பை தொடரில் நம்ம பிளேயர்ஸ் நிறைய கேட்ச் விட இதுவே காரணம் – வருண் சக்ரவர்த்தி

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் படேல், 8) ஹர்ஷித் ராணா, 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) வருண் சக்கரவர்த்தி.

Advertisement