சூரியகுமார் யாதவ் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியதற்கு இதுவும் ஒரு காரணமாம் – வெளியான தகவல்

sky
Advertisement

ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்று அதிக முறை கோப்பையை கைப்பற்ற அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி அணியானது இம்முறை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் நிச்சயம் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

Mumbai Indians MI

மிகப் பெரிய ஜாம்பவான் அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி இப்படி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து சூரியகுமார் யாதவும் காயம் காரணமாக தற்போது வெளியேறியுள்ளது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் ஆரம்பகட்ட போட்டிகளில் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட சூர்யகுமார் யாதவ் பின்னர் அணிக்கு கம்பேக் கொடுத்து 8 போட்டிகளில் 303 ரன்களை குவித்தார். அதில் மூன்று அரை சதங்களையும் அவர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மும்பை அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் தற்போது அணியில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sky-1

இப்படி சூர்யகுமார் யாதவ் வெளியேறியது மிகப்பெரிய வருத்தத்தை அளித்தாலும் அதற்குப் பின்னர் ஒரு காரணமும் இருக்கிறது. ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடருக்கு முன் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த சூரியகுமார் யாதவ் தற்போது இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் காயம் காரணமாக இப்படி உடனடியாக வெளியேற அவசியம் இல்லை என்றாலும் இந்த முடிவினை சூர்யகுமார் யாதவ் கையில் எடுக்க முக்கியக் காரணம் ஒன்று உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்படவுள்ளதால் நிச்சயம் அடுத்து வரும் தென் ஆப்ரிக்க தொடரில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் அந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே சூரியகுமார் யாதவ் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மும்பைக்கு மேலும் பின்னடைவு ! நட்சத்திர வீரர் காயத்தால் விலகல் – மொத்தமும் போச்சா (ரசிகர்கள் வேதனை)

தற்போது ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியுள்ள அவர் சிகிச்சை பெறுவது மட்டுமின்றி நல்ல ஓய்வில் இருந்து இந்திய அணிக்குத் திரும்ப உள்ளார். அப்படி அவர் அணிக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார் என்பதன் காரணமாகவே தற்போது அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement