மும்பைக்கு மேலும் பின்னடைவு ! நட்சத்திர வீரர் காயத்தால் விலகல் – மொத்தமும் போச்சா (ரசிகர்கள் வேதனை)

MI Mumbai Indians
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 9-ஆம் தேதி நடைபெற்ற 56-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. இதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்து வரலாற்றில் முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி என்ற படுமோசமான சாதனையை படைத்து ஏற்கனவே லீக் சுற்றுடன் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது. அந்த நிலையில் ஒரு வழியாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற அந்த அணி ஆறுதலடைந்து குஜராத்துக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது.

MI vs LSG

ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு மொத்தமாக பறி போன நிலையில் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற வகையில் தைரியமாக விளையாட தொடங்கியுள்ள மும்பை ஒரு சில வெற்றிகளை பதிவு செய்து அடுத்த வருடத்திற்கு இப்போதே தரமான வீரர்களை கண்டறிய தொடங்கியுள்ளது. அந்த வகையில் நாக் அவுட் சுற்று வாய்ப்பு பறி போனாலும் எஞ்சிய 4 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று புள்ளிப்ட்டியலில் கடைசி இடத்தை பிடிக்காமல் மேல் நோக்கி நகர்ந்து இந்த வருடம் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக முடிக்க அந்த அணி திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

சூரியகுமார் காயம்:
அந்த நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான தனது 11-வது லீக் போட்டி துவங்குவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் காயத்தால் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஐபிஎல் தொடர் துவங்கியபோது ஏற்கனவே காயத்தால் விலகியிருந்த அவர் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இருப்பினும் 3-வது போட்டியில் திரும்பிய அவர் அந்த முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார்.

SKY tilak Varma

அத்துடன் இந்த சீசனில் ரோகித் சர்மா உட்பட இதர முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நிலையில் 8 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 303 ரன்களை 43.29 என்ற அபாரமான சராசரியில் 145.67 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசினார். குறிப்பாக 3 அரை சதங்கள் எடுத்து மும்பையின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த அவர் தற்போது திடீரென மீண்டும் காயமடைந்து விலகியுள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏற்கனவே தொடர் தோல்விகளால் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு இது மேலும் மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பது சந்தேகமில்லை.

- Advertisement -

மும்பைக்கு பின்னடைவு
அவர் இல்லாமல் எஞ்சிய போட்டிகளில் மும்பை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வெற்றிகளும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இது பற்றி அதிகாரபூர்வமாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது பின்வருமாறு. “மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இடது முன்கை தசை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் எஞ்சிய ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகுகிறார். மே 6-ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த காயத்தின் நிலை மற்றும் எவ்வளவு நாட்களில் குணமடைவார் என்பது பற்றிய தகவல்கள் அதில் குறிப்பிடப் படவில்லை. இந்தியாவுக்காக 4-வது பேட்டிங் விளையாடும் பேட்ஸ்மேனாக அறியப்படும் அவர் காயத்தால் விலகியுள்ளது இந்திய அணிக்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் காயத்திலிருந்து குணமடையவே இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

இதையும் படிங்க : இப்போ வருந்தி என்ன பயன், மும்பை செய்த அதே தவற பண்ணிட்டீங்க – சிஎஸ்கே மீதி கைஃப் அதிருப்தி

எது எப்படி இருந்தாலும் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக அவர் நல்ல படியாக குணமடைய வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது. அந்த நிலையில் நவி மும்பையில் துவங்கிய கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் காயமடைந்த சூரியகுமார் யாதவுக்கு பதிலாக இளம் வீரர் ரமந்தீப் சிங் சேர்க்கப்பட்டு உள்ளார் என்றும் அவர் அறிவித்தார்.

Advertisement