இப்போ வருந்தி என்ன பயன், மும்பை செய்த அதே தவற பண்ணிட்டீங்க – சிஎஸ்கே மீதி கைஃப் அதிருப்தி

Kaif
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த சுற்றான நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளால் அதிகாரபூர்வமாக வெளியேறிய மும்பையில் தவிர எஞ்சிய 9 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. அதில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 4 வெற்றிகளும் 7 தோல்விகளும் பதிவு செய்து 8-வது இடத்தில் தவிக்கிறது. தற்போதைய நிலைமையில் அந்த அணி எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வெறும் 3% மட்டுமே வாய்ப்புள்ளது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

இந்த வருடம் அந்த அணி ஆரம்பத்திலேயே செய்த பல தவறுகள் தான் இந்த பரிதாப நிலைக்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக 4 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் எம்எஸ் தோனி திடீரென தனது பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவர் தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார்.

அசத்தும் டேவோன் கான்வே:
ஆனால் அனுபவமில்லாத கேப்டன்சிப் பதவியில் வெற்றியை பதிவு செய்ய தவறிய ஜடேஜா மாறாக பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் சொதப்பியதால் மீண்டும் தோனியே அதை ஒப்படைத்து விட்டார். அந்த நிலையில் ஆரம்பத்தில் மோசமான அணியாக தோன்றிய சென்னை கேப்டனாக தோனி திரும்பியதும் 2 பெரிய வெற்றிகளை சுவைத்து ஓரளவு வலுவான அணியாக காட்சியளிக்கிறது. குறிப்பாக சுமாராக செயல்பட்டு வந்த பேட்டிங் துறை அவர் தலைமையில் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியுள்ளது. தோனி கேப்டனாக திரும்பியதும் நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வேவுக்கு கொடுத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அவர் 85*, 56, 87 என கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் விளாசி அசத்தி வருவதே அதற்கு முக்கிய காரணமாகும்.

MS Dhoni Devon Conway

வேகம், சுழல் எனக்கு 2 வகையான பந்துகளையும் அட்டகாசமாக எதிர்கொண்டு பவுண்டரிகளை விளாசும் அவருக்கு இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே ஜடேஜா தலைமையிலான சென்னையில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அப்போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்த காரணத்தால் உடனடியாக பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அவருக்கு கேப்டனாக தோனி வந்த பின்புதான் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுவாக எந்த ஒரு பேட்ஸ்மேனும் முதல் ஒருசில போட்டிகளில் தடுமாறுவது சகஜம் என்ற நிலையில் அவருக்கு இந்த தொடர்ச்சியான வாய்ப்பை ஆரம்பத்திலேயே கொடுத்திருந்தால் சென்னைக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் அதிப்ருதி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மும்பை தவறு:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெறும் 1 தோல்விக்கு பின் கான்வே நீக்கப்பட்டார். இருப்பினும் தற்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும் போது கண்டிப்பாக சென்னை நிர்வாகத்தினர் வருந்துவார்கள். அவர்களிடம் நல்ல வீரர்கள் இருந்தும் அவர்களின் திறமையைப் பயன்படுத்த தவறிவிட்டனர். கான்வே ஒரு மிகச்சிறந்த கிளாஸ் பேட்ஸ்மேன். அவரிடம் 360 டிகிரியிலும் ஷாட்களை அடிக்கும் திறமை உள்ளது என்பதால் அவர் எந்த மாதிரியான ஷாட்டை அடிக்கப் போகிறார் என்று கணிக்க முடியாமல் பவுலர்கள் திணறுகின்றனர்” என்று கூறினார்.

Kaif

வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பையிலும் இதேபோல் 8.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட டிம் டேவிட் முதல் ஒருசில சொதப்பினார் என்பதற்காக அந்த அணி நிர்வாகம் பெரும்பாலான போட்டியில் பெஞ்சில் அமர வைத்தது. அதன்பின் வேறுசில வீரர்களுக்கு வாய்ப்பளித்தும் வெற்றி அடையாத அந்த நிர்வாகம் மீண்டும் வேறு வழியின்றி அவருக்கு வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பில் அசத்தலாக செயல்பட்ட அவர் இதுவரை மும்பை பதிவு செய்த 2 வெற்றிகளிலும் துருப்புச் சீட்டாக செயல்பட்டு “எனக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்காமல் தவறு செய்து விட்டீர்கள்” என்று நிரூபித்துக் காட்டினார்.

அதேபோல் முதல் போட்டியில் ரன்கள் எடுக்க தவறினார் என்பதற்காக பெஞ்சில் அமர வைக்கப்பட்ட கான்வே தற்போது சக்கை போடு போட்டு சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். அந்த வகையில் மும்பை செய்த அதே தவறை சென்னையும் செய்துள்ளது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. ஒருவேளை இது போலவே ஆரம்பம் முதலே அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ரன் மழை பொழிந்து கண்டிப்பாக சென்னையை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அளவுக்கு முன்னேற்றியிருப்பார்.

CSK-1

கேப்டன் தோனி:
கேப்டனாக தோனி மீண்டும் திரும்பியுள்ளது பற்றி முகமது கைப் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக சென்னையில் தோனி மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளார். டாஸ் வீச அவர் வரும்போதே ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வதில் வித்தியாசத்தை உணர முடிகிறது. அந்த வகையில் போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். முதல் பகுதியில் சென்னை அவரின் கேப்டன்ஷிப்பை ரொம்பவே மிஸ் செய்தது. கேப்டனாக திரும்பியதும் 3இல் 2 வெற்றிகளை பெற்றுள்ள அவர் மொத்த சென்னையையும் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement