சர்வதேச கிரிக்கெட்டின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அலறவிட்ட சூரியகுமார் யாதவ் – வைரலாகும் வீடியோ

Sky
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது டி20 போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளை பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே தொடரின் முடிவை தீர்மானிக்கும் 4 ஆவது முக்கியமான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

indvseng

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தப்போட்டியில் இஷான் கிஷன்க்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மூன்றாவது வீரராக களம் இறக்கப்பட்டார் ஏற்கனவே நடைபெற்ற 2வது டி20 போட்டியின் போது இந்திய அணியில் இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பிடிக்கவில்லை.

அதே வகையில் தனது முதல் போட்டியில் அரை சதத்தையும், அடுத்ததாக மூன்றாவது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த இஷான் கிஷன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் இன்று சூர்யகுமார் யாதவ் இருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் இந்திய துவக்க வீரர்களாக களமிறங்கினர். ரோஹித் ஆட்டமிழந்து வெளியேறியதும் அணிக்குள் சூர்யகுமார் யாதவ் முதன்முறையாக பேட்டிங் செய்ய வந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து சூரியகுமார் யாதவ் தனது அசத்தலான வருகையை அறிவித்தார். ஆர்ச்சர் வீசிய 143 கிலோமீட்டர் வேகப்பந்தினை சூர்யகுமார் யாதவ் தனக்கே உரிய பாணியில் பைன் லெக் திசையில் அடிக்கும் அவரது ஃபேவரைட் சாட்டை அடித்து சிக்சருக்கு விரட்டினார். இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து இங்கிலாந்து வீரர்களை அலறவிட்ட அதுமட்டுமின்றி 28 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

Sky 1

அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 57 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement