3 ஆவது டி20 போட்டி : இந்திய அணி முதலில் பேட்டிங். அணியில் ஒரு மாற்றத்தை செய்த கோலி – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக தற்போது இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் என்பதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்று முன்னர் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாசை வென்ற இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மேலும் இந்த டாஸ் நிகழ்விற்கு பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றங்களை கோலி தெரிவித்தார்.

Rohith

அதன்படி இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ரோஹித் சர்மா அணியில் இணைந்துள்ளார். ரோஹித்தின் வருகையால் சூரியகுமார் யாதவ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கோலி தெரிவித்திருந்தார். மேலும் இந்த போட்டியில் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் துவக்க வீரராக களமிறங்குவார்கள் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Ishan-5

இந்த தொடரின் முதல் போட்டியில் ராகுல்-தவான், இரண்டாவது போட்டியில் ராகுல்-இஷான் கிஷன் மற்றும் 3 ஆவது போட்டியில் ராகுல்-ரோஹித் என 3 துவக்க ஜோடிகள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement