நான் ஆடனது போதும். இதுக்கு மேல விளையாட இஷ்டமில்லை – ஸ்டம்ப் மைக்கில் பதிவான சூரியகுமார் யாதவ் வாய்ஸ்

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற இந்த போட்டி இரு அணிகளுக்குமே தங்களது திறனை சோதிக்கும் ஒரு போட்டியாக அமைந்ததால் போட்டியில் முடிவினை பற்றி கவலைப்படாமல் வீரர்கள் அனைவரும் பங்கேற்று இந்த பயிற்சி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சூப்பர் 12 சுற்றுக்கு முன்பாக நடைபெற்ற இந்த பயிற்சிபோட்டியில் இரு அணிகளுமே தங்களது பலத்தை பரிசோதித்து கொண்டனர். அந்த வகையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது முதலில் களம் இறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 180 ரன்கள் மட்டுமே குவிக்கவே 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை சந்தித்து இருந்தது.

இந்த பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் களமிறங்கியது முதலில் அதிரடி காண்பித்து 33 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 50 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் ஒரு போட்டியின் இறுதி கட்டத்தில் தான் விளையாடிய பந்துகள் போதுமானது என்று நினைத்த சூர்யகுமார் யாதவ்:

எதிரில் நின்ற அக்சர் பட்டேலிடம் இதற்கு மேல் பந்துகளை எதிர் கொள்ள மனமில்லை நான் விளையாட மாட்டேன் என்று கூறினார். அப்படி கூறிய அடுத்த பந்தியிலேயே அவர் அவுட் ஆகி வெளியே சென்றார். இது குறித்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement