சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக டி20 அணியில் இணையும் 2 வீரர்கள் – கோலி போட்ட பிளான்

SKY
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் ஒருவர் சேர்க்கப்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் கோலியுடன் மோதிய அந்த இளம் வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடி வரும் வீரர் சூர்ய குமார் யாதவ் தான் அந்த வீரர். 32 வயதாகும் இவர் இந்திய அணியில் இடம்பிடிக்க தீவிரமாக போராடி வருகிறார். முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடியும் கூட கோலி இவரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

SKY

- Advertisement -

இதன் காரணமாக கடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கோலிக்கு சூர்யகுமாருக்கும் இடையில் சிறிய உரசல் ஏற்பட்டது. ஆடுகளத்திலேயே இரண்டு பேரும் முறைத்துக் கொண்டனர். இதன் பின் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் சூரியகுமார் யாதாவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. கோபம் காரணமாக கோலி இவரை புறக்கணித்துவிட்டார் என்றும் செய்திகள் வந்தது. அதன்பின் கோலியை அடிக்கடி பாராட்டி சூர்யகுமார் யாதவ் பதிவிட்டு வந்தார்

இந்த நிலையில் தற்போது சூர்ய குமார் யாதவ் மும்பை அணியின் விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மும்பை அணியுடனும் இவர் இணையவில்லை. இவர் தற்போது பெங்களூரில் யோ யோ டெஸ்டில் கலந்து கொண்டு இருக்கிறார். இதனால் இவர் விஜய் ஹசாரே கோப்பையில் ஆட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக இவர் கண்டிப்பாக இந்திய அணியில் டி20 டீமில் இணைவார் என்றும் ஒருபக்கம் கூறுகிறார்கள்.

sky 2

ஐபிஎல் ஸ்டார்களான வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷான் ஆகிய வீரர்களும் இதேபோல் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லோரும் ஒன்றாக பெங்களூரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் 12ம் தேதி டி10 தொடர் தொடங்க உள்ளது. இதில் இவர்கள் ஆட அதிக வாய்ப்புள்ளது. கோலி இவர்களை தேர்வு செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது .

Ishan kishan

இதற்காகவே இவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய அணியில் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் ஆடினார்கள். ஆனால் இவர்கள் இருவரும் சரியாக அந்த தொடரில் ஆடவில்லை. சஞ்சு சாம்சனாவது அதிரடியாக ஆடினார். ஆனால் ஷ்ரேயாஸ் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும இஷான் கிஷான் ஆகிய இரண்டு பேரும் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisement