கோலி அணியில் விரைவில் இந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் – சிவராமகிருஷ்ணன் எச்சரிக்கை

LSK
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது கடந்த வாரம் துவங்கி தொடங்கி நடந்து வருகிறது.

Ind-lose

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், வார்னனையாளருமான லக்ஷ்மன் சிவராம கிருஷ்ணன் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை பற்றி பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது : தற்போதைய இந்திய அணியில் ஸ்பின்னர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். கேப்டன்சி மாற மாற ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய அணி செயல்படுவதாக எனக்கு தோன்றுகிறது. இப்போது உள்ள ஸ்பின்னர்கள் நன்றாக முயற்சி செய்தே பந்து வீசி வருகிறார்கள்.

chahal

ஆனால் அவர்கள் விரைவில் தங்களது இடத்தை இழக்கவும் அவர்களது திறமை அழியும் வாய்ப்பும் உண்டாகும் என்று நான் கருதுகிறேன். மேலும் இனி வரும் காலத்தில் இந்திய அணிக்கு நல்ல ஸ்பின்னர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு போய் விட்டது ஏனெனில் இப்பொழுதெல்லாம் மாறி வரும் சூழலுக்கேற்ப ரன் கொடுக்கக்கூடாது என்ற காரணத்திற்காக கேப்டன்கள் பீல்டர்களை அவர்களுக்கு ஏற்றார் போல் அமைப்பதில்லை.

- Advertisement -

பீல்டர்களை தூரத்தில் நிறுத்தி பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே விக்கெட் விழும் என்ற நிலைமை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் ஸ்லிப், பார்வேர்ட் ஷாட்லெக் போன்ற இடத்தில் பீல்டர்களை நிற்க வைப்பதில்லை. ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் தூரமாகவே பீல்டர்களை நிறுத்துகிறார்கள். இதன் காரணமாக ஸ்பின்னர்கல் காணாமல் போக வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

Chahal

இவர் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது இந்திய அணியில் தற்போது இருக்கும் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப், சாஹல் மற்றும் அஸ்வின் ஆகிய மூவருக்கும் பிரச்சினை ஏற்படும் என்று தெரிகிறது. மேலும் தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அதிகம் வேகப்பந்து வீச்சாளர்களில் நம்பியுள்ளது. மேலும் ஐந்தாவது ஆக பேட்டிங் தெரிந்த வீரரான ஜடேஜா இருப்பதால் முழுநேர ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் இவர் மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement