இந்திய அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேற இதனை செய்தே ஆக வேண்டும் – சிவராமகிருஷ்ணன் வேண்டுகோள்

LS
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் தற்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையான பந்துவீச்சு அணியாக மாறி உள்ளது.

Ashwin 1

- Advertisement -

ஆனால் விரல்களால் பந்தை சுழற்றக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு அடுத்து குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இந்திய அணிக்கு தயாராகி உள்ளனர்.

ஆனால் அவர்கள் இருவராலும் தொடர்ந்து அணியில் இடம்பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் மணிக்கட்டை பயன்படுத்தி ஸ்பின் செய்யக்கூடியவர்கள். மேலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் இல்லை என்றால் பந்தினை விரல்களால் சூழற்றக்கூடிய திறமை படைத்த சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை.

Ashwin

இதனால் இரண்டாம் கட்டப் பந்துவீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சிவராமகிருஷ்ணன் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அஸ்வின் கடின உழைப்பாளி அவரது இடம் அணியில் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை.

- Advertisement -

அவர் தனது கடின உழைப்பின் மூலமே இந்திய அணியில் இடம்பெற்று இன்று ஒரு தலை சிறந்த வீரராக திகழ்கிறார். மேலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் அவருக்கு சிறப்பாக ஆடும் திறன் உள்ளது. தற்போது நாம் அடுத்த நிலைக்கான இளம் சுழற்பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது.

Ashwin

அவர்கள் இருவரும் வெளியேறும்போது அணி அடுத்த வீரர்களுக்கு தயாராக இருக்கவேண்டும். எனவே அடுத்த கட்டத்திற்கான சுழற்பந்து வீச்சாளர்களை நாம் இப்போது தேட ஆரம்பித்தால் தான் அது இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று சிவராமகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement