- Advertisement -

லார்ட்ஸ் பிட்ச்சில் இங்கிலாந்து அவரை களமிறக்கினாலும் இந்தியா இதை அட்ஜஸ்ட் செஞ்சு ஜெய்க்கும்.. கோட்டக் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அதனால் தொடரை சமன் செய்த சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வெற்றியைப் பெற்று சரித்திரமும் படைத்தது.

அடுத்ததாக 3வது போட்டி ஜூன் 10ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. கடந்த போட்டியில் பர்மிங்காம் பிட்ச் இந்தியாவுக்கு சாதகமாக மாறியதே தோல்விக்கு காரணமானதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் தெரிவித்திருந்தார்கள். எனவே 3வது போட்டியில் பந்து வேகம், பவுன்ஸ், இருபுறமும் வந்து திரும்ப சாதகமாக வகையில் லார்ட்ஸ் பிட்ச் இருக்குமென்று மெக்கல்லம் தெரிவித்தார்.

- Advertisement -

லார்ட்ஸ் எப்படி இருந்தாலும்:

அங்கே ஜோப்ரா ஆர்ச்சரை விளையாட வைத்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சிறப்பாக விளையாடா விட்டால் உலகின் எந்த மைதானமும் கடினமானதாக இருக்கும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டாக் கூறியுள்ளார். எனவே லார்ட் பிட்ச் எப்படியிருந்தாலும், ஆர்ச்சர் வந்தாலும் அதற்கெல்லாம் கவலைப்படாமல் இந்தியா சிறப்பாக விளையாடி வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றிய அவர் பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலையில் முதல் 2 போட்டிகளைப் போல லார்ட்ஸ் பிட்ச்சிலும் கொஞ்சம் புற்கள் இருக்கிறது. ஆனால் நாளை இறுதியாக புற்கள் வெட்டப்பட்ட பின் போட்டி துவங்கும் நாளில் பார்த்த பின்பே பிட்ச் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும். பொதுவாக லார்ட்ஸ் பிட்ச் குறைவான ஸ்கோர்கள் அடிக்கக்கூடிய வரலாற்றைக் கொண்டது”

- Advertisement -

இந்தியா அசத்தும்:

“எனவே அது பவுலர்களுக்கு கொஞ்சம் அதிகமாக உதவி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். ஆனால் நான் மனநிலையை நம்புகிறேன். நீங்கள் பிட்ச்சில் அதிக நேரத்தை செலவிட்டு அட்ஜஸ்ட் செய்யும் போது அது உங்களுடைய நண்பனாக செயல்படும். ஜோப்ரா வருவது சவாலாக இருக்கும். எங்களுக்குத் தெரியாத சில மாற்றங்கள் இங்கிலாந்து அணியில் நிகழலாம்”

இதையும் படிங்க: 236 ரன்ஸ்.. ஜிம்பாப்வேயை அசால்ட்டாக சாய்த்த இளம் தெ.ஆ.. 3வது மிகப்பெரிய சாதனை வெற்றி

“கடந்த 2 போட்டிகளுக்குப் பின் ஒருவேளை இங்கிலாந்து சவாலான பிட்ச் வேண்டும் என்று விரும்பினால் அது நியாயமானது. அது அனைவருக்குமே சவாலானதாக இருக்கும். ஆனால் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் நன்றாக பேட்டிங் செய்தால் அது நன்றாகத் தெரியும். இல்லையென்றால் எந்த பிட்ச்சும் கடினமாகவே தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -