236 ரன்ஸ்.. ஜிம்பாப்வேயை அசால்ட்டாக சாய்த்த இளம் தெ.ஆ.. 3வது மிகப்பெரிய சாதனை வெற்றி

ZIM vs RSA
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் கேசவ் மகாராஜ் தலைமையில் தென்னாப்பிரிக்கா எளிதாக வென்றது. அடுத்ததாக 2வது போட்டியில் வியான் முல்தர் தலைமையில் தென்னாபிரிக்கா களமிறங்கியது.

ஜூன் 6ஆம் தேதி புலவாயோ நகரில் இருக்கும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்தது. அதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா எதிர்பார்த்ததைப் போலவே ஜிம்பாப்வே அணியை மீண்டும் அடித்து நொறுக்கி 626-5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அசத்தல்:

அதிகபட்சமாக பிரைன் லாராவின் 400 ரன்கள் சாதனையை பெருந்தன்மையுடன் தவற விட்ட கேப்டன் வியான் முல்தர் முச்சதம் அடித்து 367* ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்காவுக்காக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக சாதனை படைத்த அவருடன் டேவிட் பேடிங்கம் 82, ட்ரே பிரிட்டோரியஸ் 78, கெய்ல் வேரின் 42* ரன்கள் அடித்து கை கொடுத்தனர். ஜிம்பாப்வேவுக்கு அதிகபட்சமாக குண்டாய் மடிகிமு, டனாகா சிவங்கா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணியை சிறப்பாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்கா வெறும் 170 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 83* ரன்கள் குவித்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக சுப்ரேயன் 4, கேப்டன் முல்தர் 2, கோடி யூசுப் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 456 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா மீண்டும் பேட்டிங் செய்யுமாறு ஜிம்பாபேவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது.

- Advertisement -

3வது பெரிய சாதனை வெற்றி:

அதைத்தொடர்ந்து மீண்டும் பேட்டிங் செய்த ஜிம்பாப்பே கொஞ்சம் முன்னேறிய ஆட்டத்தை வெளிப்படுத்தி போராடியும் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் கிரைக் எர்வின் 49, நிக் வெல்க் 55 ரன்கள் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ்க் 4, சேனுரான் முத்துசாமி 3, கோடி யூசுப் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜுக்கு ஓய்வு.. அவருக்கு பதிலாக புதிய வீரர் அறிமுகம் – விவரம் இதோ

அதனால் இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவை 2 – 0 (2) என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றது. குறிப்பாக முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் களமிறங்கிய அந்த அணி அசால்டாக ஜிம்பாப்வேவை தோற்கடித்தது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய 3வது பெரிய சாதனை வெற்றியைப் பெற்று தென்னாபிரிக்கா அசத்தியது. இதற்கு முன் 2001 கேப் டவுன் போட்டியில் இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய 3வது பெரிய வெற்றியாகும்.

Advertisement