3 ஆவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜுக்கு ஓய்வு.. அவருக்கு பதிலாக புதிய வீரர் அறிமுகம் – விவரம் இதோ

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

மூன்றாவது போட்டியில் முகமது சிராஜுக்கு ஓய்வு :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் மிக நீண்ட தொடரான இந்த தொடரில் வீரர்களுக்கு சரியான முறையில் ஓய்வு வேண்டும் என்பதற்காக சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் ஏற்கனவே இரண்டாவது போட்டியில் ஓய்வெடுத்து கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. அதேவேளையில் ஆகாஷ் தீப் இரண்டாவது போட்டியில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்ததால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் நீடிப்பார்.

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் முதல் 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அப்படி முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இந்தியா – பாகிஸ்தான் ஃபைனல் மட்டுமே அதுக்கு சமமாக இருக்கும்.. லண்டனில் விராட் கோலி பேட்டி

ஏனெனில் லண்டன் லார்ட்ஸ் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனாலும், இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் கூடுதல் சாதகம் இருக்கும் என்பதனாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய டி20 அணியில் நட்சத்திர பவுலராக இருக்கும் அவர் நீண்ட காலமாகவே டெஸ்ட் வாய்ப்புக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement